பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 என்பதனை முன்றிலென்றும் கண்மீ என்பதனை மீ.கண் என்றும் யாவர் என்பதன யார் என்றும் இப்பெற்றியான் இலக்கண முடையன போன்று வருவன இலக்கணப் போலி. அருமருந் தன்னன் என்பதனை அருமந்தான் என்றும் மலேயமானடு என்பதனை மலாடு என்றும் இவ்வாறு சிதைந்து மருவி வருவன மரூஉவாகும். இம்மூன்றும் ஒரு காரணமின்றியே இயல்பாய் வருதலின் இயல்புவழக்கு எனப்பட்டன. இடக்கர்-அவையல் கிளவி, அடக்கல் அதனை மறைத்துக் கூறுதல். புலி நின்றிறந்த நீரல் லிரத்து, கருமுக மந்தி செம்பினேற்றை என்றற் போல்வன இடக்கரடக்கல். ஒலேயைத் திருமுகமென்றும் காராட்டை வெள்ளாடென்றும் கூறுவன மங்கல மரபினன் வருவன. யானைப் பாகர் ஆடையைக் காரையென்றும் வேடர் கள்ளச் சொல்விளம்பி யென்றும் இவ்வாறு ஒரு குழுவினர் தமக்குப் புலளுக இட்டு வழங்குவன குழுஉக் குறியெனப்படும். இவை மூன்றும் உயர்ந்தோரும் இழிந்தே ரும் இவ்வாறு மொழிவது தக்கது. என்று கொண்டு வழங்குதலின் தகுதி வழக்கு எனப்பட்டன. பி.அ. இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. இது, செய்யுட்கு ஆவதோர் முடிபு கூறுகின்றது. (இ-ள்) இனப்பொருளைச் சுட்டுதலன்றிப் பண்படுத்து வழங்கப்படும் பெயரை (ஒரு பொருளுக்கு)க் கொடுத்து வழங்கு தல் வழக்கு நெறியல்ல, செய்யுள் நெறியாகும். தாமரை, ஆம்பல் என்பன செம்மையும் வெண்மையு முடைய பூக்களேக் குறிக்கும் முறையிற் பொதுவாய் நின்ற நிலேயிற் செந்தாமரை, சேதாம்பல் என அவற்றின்கண் அமைந்த பண்பினை அடைமொழியாக இயைத்துக் கூறும் நிலையிற் செம்மை என்னும் அவ் அடைமொழி அதனின் வேருக வெண்மையுடைய வெண்டாமரை முதலிய இனமுண்டு என் பதனைச் சுட்டி நிற்றலால் அவை இனச்சுட்டுடைய பண்பு கொள் பெயராயின. அங்ங்ணம் பல பொருட்குப் பொதுவாக து