பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 ஈண்டுச் செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது. எனவே உண்டு, பட்டு என்பன செய்தெனெச்சமாய் நின்றே தமக்குரிய இறந்தகாலமுணர்த்தின எனக் கொள்ளுதலே பொருத்தமுடைய தாகும். ஞாயிறு பட்டு வந்தான்’ என்பது, ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்தகால முணர்த்துதலும், ஞாயிறுபட வந் தான் என்பது, ஞாயிறுபடா நிற்க வந்தான் என நிகழ்கால முணர்த்துதலும் வழக்குநோக்கி வுணரத்தக்கனவாம். பெயர்த்தனென் முயங்க? என்பது முதலாயின எச்சத் திரிபாயின் எச்சப்பொருளுணர்த்துவதல்லது இடமும் பாலும் உணர்த்தற்பால அல்ல. எச்சப் பொருண்மையாவது, மூன்றி டத்திற்கும் ஐந்து பாற்கும் பொதுவாகிய வினை நிகழ்ச்சி. அவ் வாறன்றி முற்றுச் சொற்கு ஒதிய ஈற்றவாய் இடமும் பாலும் உணர்த்தலின் அவை முற்றுத் திரிசொல்லெனவே படும் என்பர் சேவைரையர். வினையெச்சக் கிரிபாகிய இதனை, 345. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை. எனவரும் சூத்திரத்தால் உணர்த்துவர் நன்னூலார் . வினையெச்சங்கள் தத்தம் வாய்பாடுகள் ஒன்று மற்ருென் ருய்த் திரிந்து வருவன உளவேனும் அவைதம் பொருளிற் றிரியாவாம்?? என்பது இதன் பொருள். வினைக்குறை- வினை யெச்சம். இனி, வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்பதன் கண் குறி என்றது பெயர் எனக்கொண்டு வினையெச்சமாகிய சொற்களும் (உம்மையால்) பெயரெச்சமாகிய சொற்களும் முற்றுச் சொற்களும் முற்கூறிய பெயர்களோடு வேறு வேருகப்பல பெயர் களே:பும் உடையவாம்’ எனப்பொருள் வரைந்து அவை பெறும் பெயர்களைப் பின் வருமாறு எடுத்துக்காட்டுவர் நச்சினர்க்கினியர். (உ-ம்) பெயர்த்தனென் முயங்க யானே?? - இது வினை யெச்சத் தன்மைத் தெரிநிலே முற்று.