பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 வந்தனே சென் மோ?? - இது வினையெச்ச முன்னிலைத் தெரிநிலை முற்று. முகந்தனர் கொடுப்ப? - இது வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலே முற்று. ஒலிசினே வேங்கை கொய்குவஞ் சென்று.ழி? - இது வினை யெச்ச உளப்பாட்டுத் தன்மைத் தெரிநிலே முற்று. ‘வறுவியென் பெயர்கோ - இது, வினையெச்சத் தன்மை வினேக்குறிப்பு முற்று. 'நறுநுதல் நயந்தனை நீவி வெள்வேல் வலத்திர்? இவை வினேயெச்ச முன்னிலை வினேக்குறிப்பு முற்று , 'சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர் அற்றம் பார்த்தல்கும் கடுங்கண் மறவர். இவை வினையெச்சப் படர்க்கை வினைமுற்று. 'எல்வளே நெகிழ்த்தோர்க் கல்லலுறீஇயர்: , உள்ளேன் தோழி படீஇயரென் கண்ணே என்பன வினையெச்ச வினைத்திரி சொல். கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் குவளையே யளவுள்ள கொழுங்கண்ணுள் அவளேயே?, புரிமாலேயர் பாடினி யரும். இவை முறையே உயர்திணை முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. பெருவரை மிசையது பிறங்கு வெள்ளருவி, தெரி நடையமாகளிறு - இவை அஃறிணை இருபாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. பெருவேட்கையேன் எற்பிரிந்து? - இது பெயரெச்சத் தன்மை ஒருமை வினைக்குறிப்பு முற்று. கண்புரை காதலேம் எம் உள்ளான்-இது பெயரெச்சத் தன்மை உளப்பாட்டுப்பன்மை வினைக்குறிப்பு முற்று. உலங்கொள் தோளினே ஒரு நின்ஞல்: . இது பெயரெச்ச முன்னிலே ஒருமை வினைக்குறிப்பு முற்று. :வின. வேட்கையீர் வீரர் வம்மின் - இது பெயரெச்ச முன்னிஆலப் பன்மை வினைக்குறிப்பு முற்று. 28