பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பிேன்பு நூல் செய்தார் வினையெச்ச முற்று என்றுபெயர் கூருமல், முற்றுவினையெச்சம் என்று பெயர் கூறினுரேனும், பெய ரெச்ச வினேக்குறிப்பு முற்று என்று பெயரெச்சத்திற்குக் குறியிட்டு ஆளவேண்டுதலின், அதற்கும் (வினையெச்ச முற்று) என்னும் அப்பெயரே கொள்ள வேண்டும் என்றுணர்க. என்ருர் நச்சிஞர்க்கினியர். இங்ங்னம் நச்சிர்ைக்கினியர் எடுத்துக்காட்டும் இலக்கியத் தொடர்களையும் அவற்றிலாளப்படும் சொற்களுக்குக் கூறப்படும் வேறு வேறு இலக்கணக் குறியீட்டுப் பெயர்களேயும் கூர்ந்து நோக்குங்கால் வினையெச்ச பெயரெச்சங்களே செய்யுளியற்றும் புலவல்ை முற்ருகத் திரித்து வழங்கப்பெறுவன என்பது அவர் கருத்தாதல் இனிது விளங்கும். 'வினையெச்சம் முற்ருய்த் திரிந்து பின்னும் அதன் பொருளுணர்த்தி நிற்றல், இன்றி யென்னும் வினேயெஞ்சிறுதி என்னுஞ் சூத்திரத்தானும் உணர்க?' எனத் தொல்காப்பியர் கருத்தும் அதுவே என அவர் உய்த்துணர்ந்து கூறும் முறை இங்கு நுணுகி நோக்கத் தகுவதாகும். பாயுந்து, தூங்குந்து என வருவன பெயரெச்ச வினைத் திரிசொல். 'கண்ணும் படுமோ என்றிசின் யானே--இது தன்மை முற்றுவினத் திரிசொல். ஈங்குவந்தித்தந்தாய்இது முன்னிலே முற்றுவினத் திரிசொல். புகழ்ந்திகுமல்லரோஇது படர்க்கை முற்றுவினைத் திரிசொல். இனி, இச் சூத்திரத்திற்கு வினையெச்சம் சொல்லானும் பொருளானும் வேறுபட்டுப் பல இலக்கணத்தையுடையவாய் வரும் எனப் பொருள் கொண்டு தெய்வச்சிலேயார் கூறும் மேற்கோள் விளக்கங்கள் நச்சினர்க்கினியர் கருத்தினை அடி யொற்றி யமைந்துள்ளன. சடுஅ. உரையிடத் தியலு முடனிலே யறிதல். இது, வழக்கின்கண் பயிலும் சொல்வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) வழக்கின்கண் உடன் நிற்கற் பாலன வல்லாத சொற்கள் உடன் நிற்றலே அறிந்து கொள்க. எ-று.