பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 'பிரிவில வரையா? எனவே பிரிவன கடியப்படுமெனக் கொள்க: 2 என இதற்கு மயிலே நாதர் கூறும் உரையும் உதார் ணங்களும் இத்தொடர்பினைப் புலப்படுத்தல் ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். இனி, ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்? எனப் பாடங் கொண்டு சேவைரையர் இச்சூத்திரத்திற் கெழுதிய உரையை அடியொற்றியமைந்தது, 397. ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பொருள் வேறின்றி ஒரு பொருளேக் குறித்து வரும் பல சொற்கள் அப்பொருளேச் சிறப்பித்தலின் வழுவென்று நீக்கப் படா என்பது இதன் பொருள். (உ-ம்) மீமிசை ஞாயிறு, உயர்ந்தோங்கு பெருவரை, புனிற்றிளங் கன்று, நாகிளங் கமுகு, இரும்பேரொக்கல், குழிந் தாழ்ந்த கண் எனவரும். சசுக. ஒருமை சுட்டிய பெயர் நிலேக் கிளவி பன் மைக் காகு மிடனுமா ருண்டே , இது பால் வழுவமைக்கின்றது. (இ-ள்) ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மைக்கு ஆகும் இடமும் உண்டு. எ-று. (உ-ம்) ஏவலிளேயர் தாய் வயிறு கரிப்ப? (புறம்- J என்புழித் தாய்’ என்னும் ஒருமைப் பெயர் ஏவல் இளேயர் (பலர்) என்பதல்ை தாயர் எனப் பன்மை உணர்த்தியது, பேன்மைக்காகும் இடனுமாருண்டே என்பது பன்மைச் சொல் ஒருமைச் சொல்லொடு தொடர் தற்குப் பொருந்தும் இடம் உண்டு என்ற பொருளும் தந்து நிற்றலால், அஃதை தந்தை அண்ணல் யானை அடுப்போர்ச் சோழர் எனத் தந்தை என்னும் ஒருமைச்சொல் சோழர் என்னும் பன்மைச் சொல்லொடு தொடர்தலும் கொள்ளப்படும்.