பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 'நிலம் வலிது ஆயிற்று' என ஆக்கம் பெற்று வரின், அத் தொடரிற் குறிக்கப்பட்ட நிலம் என்பது இயற்கைப் பொரு ளாதலன்றிக் கல்லும் சுண்ணும்பும் போல்வன பெய்து குற்றுச் செய்யப்பட்ட செயற்கைப் பொருளாதல் வேண்டும். இனி நீர் நிலமும் சேற்று நிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தாைெருவன், நிலம் வலிதாயிற்று' என்றவழி, முன் மெலிதாயது பின் வலிதாய் வேறுபட்டது? என ஆக்கம் வேறு பாடு குறித்து நிற்றலின், இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்ரும் என விளக்கங் கூறுவர் சேவைரையர், பவணந்தி முனிவர் இந்நூற்பாவின, 403. இயற்கைப் பொருளே யிற்றெனக் கிளத்தல், எனத் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் நன்னூலில் எடுத்தாண்டுள்ளார். உயி). செயற்கைப் பொருளே யாக்கமொடு கூறல். செயற்கைப் பொருள்மேற் சொல் நிகழுமாறு உணர்த்து கின்றது. ( இ-ள்) செயற்கையிகிைய பொருளை (த்திரிபு கூறுங்கால்) ஆக்கங் கொடுத்துச் சொல்லுக. எாறு. செயற்கைப் பொருளாவது ஏதேனும் ஒரு காரணத்தால் தன் தன்மை திரிந்த பொருள். ஆக்கமொடு கூறல் என்ப தல்ை திரிபு கூறுதல் பெற்ரும். என்ன ? அதன்கனல்லது வாராமையின். இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்பன இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. உக. ஆக்கந் தானே காரண முதற்றே. இது, மேலதற்கோர் புறனடை யுணர்த்துகின்றது. (இ-ள்) (அங்ங்னம் செயற்கைப் பொருளோடு இயைத் துரைக்கப்படும்) ஆக்கச் சொல் காரணத்தை முதலாகவுடைய தாகும். எ-று.