பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் நிழற்படப் பதிப்பு தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புரை தமிழ் இலக்கண நூல் வரிசையில் தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடத்தக்க சிறப்பிடம் பெற்றவை. இரு நூல்களுக்கும் இடைப்பட்ட காலத்து மொழிப்புலம், அடித்தளம் சிதையாதது; எனினும் பல மாற்றங்களைப் பெற்றது. எனவே, இரு நூல்களையும் ஒப்பியல் முறையில் நோக்குதல் தேவையாகும். இந்நோக்கில் அடிப்படையிடும் ஆய்வைப் பேரா. க.வெள்ளைவாரணர் மேற்கொண்டு இருபெரு நூல்களின், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இரண்டையும் தனித்தனியே ஒப்பீடு செய்துள்ளார்கள். இது சொல்லதிகார ஒப்பியல் நோக்கு. தமிழ்ப் பல்கலைக் கழகம் இதனை வெளியிட்டுக்கொள்ள இசைவு நல்கிய பேராசிரியர் அவர்கட்கு நன்றி தெரிவிக்கின்றோம். இதன் தேவைப்பாடு கருதியும், பயில்வோர்க்கு உதவும் நோக்குடனும் இது வெளியிடப்படுகின்றது. தி. ஆ.2015-சித்திரை மே-1984 பதிப்புத் துறை, தஞ்சாவூர். தமிழ்ப் பல்கலைக் கழகம்,