பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 (உ-ம்) எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் யாத்தமை யாற் பயிர் நல்லவாயின; கடுக்கலந்த கையிழி யெண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லவாயின எனவரும். இயற்கைப் பொருள் ஆக்கமும் காரணமும் பெருது வருதலும் செயற்கைப் பொருள் அவைபெற்று வருதலும் இலக்கணமெனவே, இவ்வா றன்றி வருவன மரபு வழுவென்பதாம். உ.உ. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ள்ே. இஃது எய்தியது விலக்கியது. (இ-ள்) (காரண முதற்று எனப்பட்ட) ஆக்கச் சொல் வழக்கினுள் காரணமின்றி வரினும் குற்றமின்று என்பர். எ-று. போக்கு-குற்றம், (உ-ம்) பயிர் நல்லவாயின, மயிர் நல்லவாயின எனவரும். வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே செய்யுளுட் காரணம் பெற்றே வரும் என்பதாம் . செய்யுளுள் எனக் கிளந்தோதா தவழி அவ்விதி உலக வழக்கினேயே நோக்குமாதலின், இச்சூத்திரத்தில் 'வழக்கினுள்? என விதந்துரைத்தல் வேண்டா , அம்மிகுதியான், செயற்கைப் பொருள் ஆக்கமும் காரணமும் இன்றி வருதலும் காரணம் கொடுத்து ஆக்கமின்றி வருதலும் என இரண்டுங் கொள்ளப் படும் என்பர் இளம்பூரண . (உ-ம்) பைங்கூழ் நல்ல என ஆக்கமும் காரணமு மின்றி யும், எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் யாத்தமையாற் பைங்க.ழ் நல்ல என ஆக்கமின்றியும் வந்தன. கிளவியாக்கத்தில் உம் முதல் உஉ வரையுள்ள மூன்று சூத்திரங்களின் பொருளையும் உஉ-ஆம் சூத்திரத்திற்கு உரை யாசிரியர் கூறிய விளக்கத்தினையும் வகைப்படுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 玄