பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 404. காரண முதலா ஆக்கம் பெற்றும் காரண மின்றி ஆக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியும் இயலுஞ் செயும்பொருள். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 6 காரணச் சொல்லே முன் கொண்டு ஆக்கச் சொல்லொடு வருவனவும், காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல்லொடு வரு வனவும், ஆக்கச் சொல்லின்றிக் காரணச் சொல்லொடு வரு வனவும், ஆக்கமும் காரணமுமின்றி வருவனவும் என்னும் இந்நான்கு திறத்தில் நடக்கும் செயற்கைப் பொருள்கள் ! என்பது இதன் பொருளாகும். செயும் பொருள் இயலும் என வினைமுடிபுசெய்க. செயும் பொருள் - செயற்கைப் பொருள். உங். பான் மயக்குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். இது திணையுணர்ந்து பால் ஐயந் தோன்றியவழி சொல் நிகழ்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) (திணை துணிந்து) பால் துணியாது நின்ற ஐயப் பொருளைத் தானறிந்த அவ்வத் திணைப் பன்மையாற் கூறுக. 6F - go . கிளவி என்றது, ஈண்டுப் பொருளே. ஐயப் பொருளாவது சிறப்பியல்பால் தோன்ருது பொது வியல்பால் தோன்றிய பொருள். (உ-ம்) ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ ஆண்டுத் தோன்றுவார் எனவும், ஒன்ருே பலவோ செய்புக்கன எனவும் வரும். திணவயின் என்னது தானறி பொருள் வயின் எனப் பொதுப்படக் கூறினமையால் ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ கறவையுய்த்த கள்வர் எனவும், ‘ஒருத்தி