பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 'உருவென்பது உடலுயிர்க் கூட்டப் பொதுமை யாகிய மக்களென்னும் பொதுமைக்கு ஏலாது உடலேயே உணர்த்துத லானும், பெற்றம் என்பது இயற்பெயராயினும் ஒருகாற் சொல் லுதற்கண் ஒரு பால் மேல் நில்லாது இருபால்மேல் நிற்ற லானும் வழுவமைதியாயிற்று' என்பர் நச்சினர்க்கினியர். உடு. தன்மை சுட்டலு முரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. இஃது ஐயுற்ற பொருளைத் துணிந்த வழிச் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஐயத்திற்கு வேருய்த் துணிபொருளிடத்து அன் மைச்சொல் அப்பொருளின் உண்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலும் உரித்து என்று கூறுவர் ஆசிரியர் . எ-று. வேறிடத்தான அன்மைக்கிளவி தன்மை சுட்டலும் உரித்து என மொழிட என இயைத்துப் பொளுரைக்க. வேறிடம் என்றது, ஐயத்திற்கு வேருய்த் துணிந்து தழி இக் கொண்ட பொருளே. குற்றியோமகனே' என ஐயந் தோன்றிய நிலையில் மகன் என்று துணிந்த வழி, குற்றியல்லன் மகன் எனவும், குற்றியென்று துணிந்த வழி மகனன்று குற்றி எனவும், ஒரு வனே ஒருத்தியோ இங்குத் தோன்ரு நின்ருர் என ஐயந் தோன்றிய நிலையில் ஒருவன் என்று துணிந்தவழி ஒருத்தி பல்லன் ஒருவன் எனவும், ஒருத்தியென்று துணிந்தவழி ஒருவ னல்லள் ஒருத்தி எனவும், ஒன்ருே பலவோ செய்புக்க பெற்றம் என ஐயந் தோன்றிய நிலையில் ஒன்றென்று துணிந்த வழி பலவன்று ஒன்று எனவும், பலவென்று துணிந்த வழி, ஒன்றல்ல பல எனவும் துணியப்படும் பொருளின்கண்ணே அல்லாத தன்மையை வைத்துச் சொல்லுவர். குற்றியல்லன் மகன் என்புழிக் குற்றியின்அல்லன் என்று ஐந்தனுருபு விரித்துரைப்பர் இளம்பூரணர். ஐயுற்ற நிலையில் மறுக் கப்படு பொருளின் அன்மைத்தன்மையினைச் சுட்டுதற்குரிய அன்மைக் கிளவி, அதற்கு வேருகிய துணியப் படு பொருள்மேல் நின்று அதன் மெய்த் தன்மையினைச் சுட்டி நிற்றலும் உண்டு