பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 என்பார், 'அன்மைக் கிளவி வேறிடத்தான தன்மை சுட்ட லும் உரித்து?’ என்ருர் . உம்மை இறந்தது தழி இய எச்சமா தலால் குற்றியன்று மகன் என மறுக்கப்படு பொருளாகிய தன்னிடத்து அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலும் கொள்க. என்ன? அன்மைக் கிளவி வேறிடத்தான தன்மை சுட்டலும் உரித்து எனவே அன்மைக் கிளவி தன்னிடத்தான அன்மைத் தன்மையைச் சுட்டலும் உரித்து என்பதும் கொள்ளப் படு மாதலின் என்க. இனி வேறிடம் என்பதனைத் துணியப் படும் பொருட்கு வேருகிய மறுக்கப் படும். பொருள் எனக் கொண்டு, 'மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகன் எனவும் குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றி எனவும், ஆண் மகனென்று துணிந்தவழிப் பெண்டாட்டி யல்லள் ஆண்மகன் எனவும், பெண்டாட்டி யென்று துணிந்தவழி ஆண்மகனல்லன் பெண்டாட்டி எனவும், ஒன்றென்று துணிந்தவழிப் பலவல்ல ஒன்றெனவும், பலவென்று துணிந்தவழி ஒன்றன்று பல எனவும் மறுக்கப்படும் பொருள்மேல் அன்மைக் கிளவி அன் மைத் தன்மையைச் சுட்டி நின்றது?’ என உதாரணங் காட் டுவர் சேவைரையர். மறுக்கப்படும் பொருளின் அல்லாத தன் மையையுடையது துணியப்படும் பொருளாதலால் அதன் மெய்த் தன்மையைச் சுட்டும் நிலையில் அதன் கண்ணே அன் மைக் கிளவியை வைத்துரைத்தலும் பொருந்தும் என்பதாம். திணை பால்களில் ஐயந்தோன்றிய வழியும் துணிந்த வழியும் சொல் நிகழுமாறு உணர்த்தும் இம்மூன்று சூத்திரப் பொருளே யும் தொகுத்துக் கூறும் நிலேயில் அமைந்தது, 375. ஐயந் திணைபால் அவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தினமேல் ஜயந்தோன்றியவழி அவ்விருதிணைக்கும் பொதுவாகிய சொல்லானும், பால்மேல் ஐயந்தோன்றியவழி அவ்வப் பால்களுக்குப் பொதுவாகிய சொல்லானும், இன்ன