பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • உவப்பு, உயர்வு, சிறப்பு, செறல், இழிவு என்னும் இவ் வைந்திடத்தும் பாலும் தினையும் மயங்கி வருதலும் இயல்பாம்: என்பது இதன் பொருள்.

(உ-ம்) தன் புதல்வனே என் அம்மை வந்தாள்’ என்பது உவப்பின் ஆண்பால் பெண்பாலாயிற்று. ஒருவனை அவர் வந்தார் என்பது உயர்வின் ஒருமைப்பால் பலர்பாலாயிற்று. தாயாகித் தலையளிக்கும் தண்டுறையூர2 என்பது சிறப்பின் ஆண்பால் பெண்பாலாயிற்று, எனைத்துணையராயினும் என்னுந் தினத்துணையுந் , தேரான் பிறனில் புகல்’ என்பது செறலிற் பலர்பால் ஒருமைப் பாலாயிற்று. பெண்வழிச் செல்வானே நோக்கி இவன் பெண் என்பது இழிவின் ஆண்பால் பெண் பாலாயிற்று. ஓர் ஆவினே என் அம்மை வந்தாள்’ என்பது, உவப்பின் அஃறிணை உயர்திணையாயிற்று. செந்தார்ப் பசுங் கிளியார்? என்பது உயர்வின்ை அஃறிணை உயர்திணையாயிற்று. ‘ஏவவுஞ் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர், போஒமளவு மோர் நோய்? என்பது செறலின் உயர்தினே அஃறிணையா யிற்று. இரவெதிர் கொள்ளா இருகாற் பசுவே, அரிய விரதம் அடங்குதலில்லார் என்பது இழிப்பின் உயர்திணை அஃறிணை யாயிற்று. உ.அ. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலேபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலே படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய வென்ப. இஃது, இட வழுக்காத்தல் நுதலிற்று. (இ ள்) செல்லுதல், வருதல், தருதல், கொடுத்தல் ஆகிய நான்கு தொழிற்கண்ணும் நிலைபெறப் புலப்படா நின்ற அந் நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்திற்கும் உரியவாய் வரும் எ-று. இவ்வினைச் சொற் கள் நான்கும் விகுதியா னன்றி முதனிலையாய் நின்ற நிலையி லேயே இடங்குறித்து நிற்றலுடைமையால் அம்மூவிடத்தும் உரிய என்ருர் ஆசிரியர்.