பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அவை மூவிடத்திற்கும் உரியவாமாறு பின்வரும் இரண்டு நூற்பாக்களில் விரித்துரைக்கப்பெறும். உக.ை அவற்றுள் தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயி ரிடத்த. இது, தருசொல் வருசொல் என்பன இடமுணர்த்துமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தருசொல்லும் வருசொல்லுமாகிய இரண்டும் தன்மை முன்னிலையாகிய இரண்டிடத்திற்கும் உரிய எ-று. எனவே இவை படர்க்கைக்கண் நிலைபெறத் தோன்ரு என்பதாம் . (உ-ம்) எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான் எனவும், என்னுழை வந்தான், நின்னுழை வந்தான் எனவும் இவை ஈரிடத்தும் வந்தன. தரப்படும் பொருளே யேற்பான் தா னும் முன்னின்ருனும் ஆக லானும், வரவுதொழில் தன்கண்ணும் முன்னின்ருன் கண்ணுஞ் சென்று முடிதலானும், ஈற்றனன்றி முதனிலையால் இவ்விருசொல் லும் தன்மை முன்னிலைக் குரியவாயின. நிலைபெறத் தோன் றும் அந்நாற் சொல்லும், தன்மை, முன்னிலே படர்க்கை யென்னும், அம்மூவிடத்தும் உரிய; என மூன்றிடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவும் கொள்ள வைத்தமையான், பெரு விறலமரர்க்கு வென்றி தந்த எனவும், 'துரண்டில் வேட்டு வன் வாங்க வாராது?’ எனவும் மயங்கி வருவனவும் அமைக்கப் படும் என்பர் சேனவரையர் . கடல். ஏனே யிரண்டும் ஏனே யிடத்த, இஃது ஏனையிரு சொற்களும் இடமுணர்த்துமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) செல்லுதலும் கொடுத்தலும் ஆகிய சொற்கள் படர்க்கையிடத்திற்கு உரியன எ-று.