பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 (உ-ம்) அவன்கட் சென்ருன்; அவற்குக் கொடுத்தான் எனவரும். செலவு தொழில் படர்க்கையான்கட் சென்றுறுதலானும், கொடைப் பொருள் ஏற்பான் படர்க்கையானகலானும் ஈற்ருன் னறி இவ்விரு சொல்லும் முதனிலேயால் படர்க்கையிடத்திற்குரிய வாயின. இம்மூன்று சூத்திரப் பொருளையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 380. தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை எழுவா யிரண்டும் எஞ்சிய வேற்கும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். சிதரல், வரல், கொடை, செலல் என்னும் இந்நான்கு சொல்லும் படர்க்கைக்கு ஆம். இவற்றுள் முற்கூறப்பட்ட் தரல் வரல் என்னும் இரண்டும் எஞ்சி நின்ற தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆம்? என்பது இதன் பொருளாகும். கூக. யாதெவ னென்னு மாயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். இஃது, அறியாப் பொருள்மேற் சொல் நிகழ்த்தும் மரபு கூறு கின்றது. (இ-ள்) யாது எவன் என்னும், இரண்டு சொல்லும் (தெளிய) அறியப்படாத பொருளிடத்து வினவும் வினவாய் யாப்புறத் தோன்றும் எ-று. (உ-ம்) இச்சொற்குப் பொருள் யாது; இச்சொற்குப் பொருள் எவன் எனவரும். எவ்வகையாலும் அறியப்படாத பொருள்பற்றி வினத் தோன்ருதாதலின், இங்கு அறியாப் பொருள் என்றது, பொது வகையால் அறியப்பட்டுச் சிறப்புவகையால் தெளிய அறியப் படாத பொருளே.