பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3 யாய் நிற்கும் எனவும், உம்மைபெறுத லெசப்புமையான் முற்றும்மையோடு எச்சவும்மையை மாட்டெறிந்தார் எனவும் இச்சூத்திரப் பொருளே விளக்குவர். மன்னுதல் பொருத்தமும் மன்னமை பொருந்தாமையும் எனப் பொருள் கொண்ட தெய்வச் சிலேயார், மன்னப்பொரு ளும் அன்னவியற்றே எனவரும் இந் நூற்பாவுக்கு 'பொருந் தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழ வேண்டு மிடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத் துச் சொல்ல வேண்டும். எனப் புதியதோர் பொருள் கூறி யுள்ளார். ‘'வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும், பரமும் அதிை, பதியும், பசுவும், பாசமும் அளுதி எனவரும். உலகும் உயிரும், பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் இவற்ருெடு பொருந் தாத பொருள் ஆனவாறும் காண்க. உடம்பும் உயிரும் வாடி யக் கண்ணும்? எனவும், நோயும் இன்பமும் எனவுங் கூறிய வாறும் காண்க: என்பது இந்நூற்பாவுக்குத் தெய்வச் சிலையார் காட்டிய எடுத்துக் காட்டும் விளக்கமும் ஆகும். ங்ங், டச ஆகிய இவ்விரு சூத்திரப்பொருளேயும் இவற் றுக்கு அமைந்த இளம்பூரணர் உரையையும் தொகுத்துரைக் கும் முறையில் அமைந்தது, - 398. இனத்தென் றறிபொருள் உலகி னிலாப்பொருள் வினேப்படுத் துரைப்பின் உம்மை வேண்டும். என்னும் நன்னூற் சூத்திரமாகும். இத்துணைத் தென்று வரையறுத்து உணர்த்தப் படும் பொருளாதி எப்பொருள்களும் உலகின்கண் இல்லாத பொருள் களும் வினையொடு கூட்டிச் சொல்லுங்கால உம்மை கொடுத்துச் சொல்லுக என்பது இதன் பொருளாகும். இச்சூத்திரத்தில் வரும் உலகினிலாப் பொருள் என்னுந் தொடர் இளம்பூரணர் உரைக்குப் பொருந்த உலகின் இல்லாப்