பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 (இ-ள்) பொருளொடு புணராது நின்ற சுட்டுப் பெயராமே யெனினும், சுட்டுவதோர் பொருளிடத்து வேறுபட நில்லாமல் அப்பொருளேயே உணர்த்தி நிற்கும். எ - று பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் என்றது, பொருள் இடம் காலம் சினே குணம் தொழில் என்பனவற்றுள் ஒன்றை வரைந்துணர்த்தாது எல்லாப் பொருண்மேலும் செல்லும் தன் மையில் அமைந்த இது இவை முதலிய சுட்டுப் பெயர்களே. இப்பயறு. இக்குதிரை என்ருற் போல்வன பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்களாம். (உ-ம்) பயறுளவோ வணிகிர் என விஞயினுர்க்கு, "இவையல்லது இல்லே’ என ஒருவன் சுட்டிக் கூறிய வழி இவை: என்னும் சுட்டு, பொருளொடு புணராச் சுட்டுப் பெயராகும், 'இப்பயறில்லது இல்லே எனப் பொருளோடு புணர்த்திச் சுட்டிக் கூறவேண்டியவன் "இவையல்லது இல்லே! எனச் சுட்டிய வழி, முன் கிடந்த பயறுகாட்டி இவை என்ருனுகலின், இவை என்னும் சுட்டு இப்பயறு’ என அப்பொருளேயே சுட்டி நிற்றல் காண்க. யானை நூல் வல்லாைெருவன் காட்டுட் போந்தபொழுது ஒர் யானையின் அடிச்சுவட்டினைக் கண்டு, இஃது பட்டத்து யானே யாதற் கேற்ற இலக்கணமுடைத்து என்ற நிலையில் இஃது? என்பது இன்ன பொருளெனப் பொருளொடு புணராத சுட்டாய்ப் பலவற்றுக்கும் பொதுவாய் நிற்பினும், சொல்லுவான் குறிப்பால் இவ்வடிச் சுவட்டுக்குரிய யானே? என்ற பொருளே யுணர்த்தி நிற்றலால், பொருள் வேருகாது இவ்யானையெனச் சுட்டிக்கூறிய பொருளாய் அமைந்து நிற்றல் காண்க. ந.அ. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினேக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிள வார் இயற்பெயர் வழிய என்மனர் புலவர்.