பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சுட்டுப்பெயர் வருதல் முறையெனவே, இவ்விரு பெயரும் அவன் சாத்தன், சாத்தன் அவன் என ஒன்றற்கொன்று பயனிலை யாதற் கண்ணும், அவனும் சாத்தனும் வந்தார்; சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருளேக் குறித்தனவாய் வருதற் கண்ணும் இவற்றுள் எதனை முதற்கண் கூறினும் அமையும் என்பதாம். ங்க.ை முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. இஃது எய்தியது விலக்குகின்றது. (இ-ள்) இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கு ஒருங்கு இயலும் வழிச் சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்து. எ-று. (உ-ம்) அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னகொல் பின்னே யதன் கண் விளைவு. எனவரும். இதனுள் அவன் என்பது இயற்பெயர். இயற் பெயர்க்குமுன் சுட்டுப்பெயர் வருதல் வழுவாயினும் செய்யுளா தலின் அமைத்துக்கொள்ளப்பட்டது. சம். சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். இது வழக்கின்கண் மரபுவழா நிலையும் செய்யுட்கண் வழுவமைதி யும் உணர்த்துகின்றது . (இ.ஸ்) சுட்டை முதலாகவுடைய காரணப் பொருண்மை யை'யுணர்த்துஞ் சொல்லும், சுட்டுப் பெயரையொத்துத் தன்னுற். சுட்டப்படும் பொருளையுணர்த்துஞ் சொற்குப் பின்னர்க் கூறப் படும், எ~று. (உ-ம்) சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனுற் றந்தையுவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள், அதனுற் கொண்டானுவக்கும் எனவரும்.