பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1 வினைக்கு ஒருங்கு இயலுங்கால் என்பது அதிகாரத்தால் வருவித்துரைக்கப்பட்டது. ஈண்டுச் சிறப்பினுகிய பெயர் என்றது, மன்னர் முதலாயினராற் பெறும் வரிசையினைக் குறித்த ஏதிை, காவிதி முதலிய சிறப்புப் பெயர்களே. (உ-ம்) ஏன தி சாத்தன், காவிதி கண்ணந்தை என வரும். பெயர் நிலைக் கிளவிக்கும் என்ற உம்மையால், தவம், கல்வி, உறுப்பு முதலாயினவற்ருகிைய பெயரும் இயற் பெயர்க்கு முன்னர்க் கிளத்தல் கொள்ளப்படும். (உ - ம்) முனிவன் அகத்தியன்; தெய்வப் புலவன் திருவள்ளுவன்; சோழன் நலங்கிள்ளி; குருடன் கொற்றன் எனவரும். இச்சூத்திரப் பொருளே அடியொற்றி யமைந்தது, 392. தினே நிலஞ் சாதி குடியே யுடைமை குணந் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'திணைப் பெயர் முதலான பெயர்களுடனே இயற்பெயரை இயைத்துச் சொல்லுங்கால், அவ்வியற் பெயரை முற் குறித்த பெயர்களுக்குப் பின்னே சொல்லுதல் சிறப்புடைத்து’ என்பது இதன் பொருளாகும். (உ-ம்) குன்றவன் குறவன், அருவாளன் அழகன், பார்ப்பான் மாடலன், கஞ்சாறுார்கிழான் கண்ணன், மெய்யன் வெண்காடன், நாடகி நம்பி என முறையே திணை, நிலம், சாதி, உடைமை, குணம், தொழில் பற்றிய பெயர் களின் பின்னக இயற்பெயர் வந்தமை காண்க . ஏனய வற்றுக்கு உதாரணம் முன்னர்க் காட்டப் பெற்றன. ச.உ. ஒரு பொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில் வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே. இஃது ஒருபொருள் மேற் பலபெயர் வருங்கால் மரபு வழாமைக் காக்கின்றது .