பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 (இ-ள்) ஒரு பொருளைக் குறித்துவந்த பலபெயர்ச் சொற் கள், ஒரு தொழிலே முடிபாகக் கூருது, பெயர்தோறும் வேறு வேருகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒருபொருள வாய்ப் பொருந்தும் இடனுடைய அல்ல எ-று. எனவே பல பெயர் அடுக்கிவரின் ஒருவினையான் முடித்தல் வேண்டும் என்பதாம். தொழில் வேறுகிளத்தலாவது ஒரு பொருள் மேல் வரும் பல பெயர்களுக்கும் ஒருதொழிலே முடிபாகக் கூருது வேறு வேறு முடிக்குஞ் சொல்லேத் தந்து கூறுதல். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என இவ்வாறு ஒரு தொழிலே முடிபாகக் கூருது, ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் உண்டான், செயிற்றியன் சென்றன் ! என வேறு வேறு தொழில் கிளந்தவழி, வந்தானும் உண்டானும் சென்ருனும் ஒருவகைாது வேறுவேருவர் எனப் பொருள் வேறு பட்டு வழுவாம் ஆதலின் அவ்வாறு வழுவாமைக் காத்தது இச் சூத்திரம் எனவுணர்க . எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக, மனளன் வருக என்புழி, ஒருபொருள் குறித்த பலபெயர் தோறும் காதல் முதலியன பற்றி ஒரு தோழிலே பலகால் வந்த தல்லது வெவ்வேறு தொழில் வாராமையான், அத்தொடர் ஒரு தொழில் கிளந்ததெனவே கொள்ளப்படும். இச்சூத்திரப்பொருளே அடியொற்றி யமைந்தது, 391. ஒருபொருண் மேற்பல பெயர் வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒரு பொருளின்மேற் பலபெயர்கள் அடுக்கிவரின், அவற் றிற்கெல்லாம் ஈற்றிலே ஒரு வினையைக் கொடுப்பர். சிறு பான்மை பெயர் தோறும் ஒரு வினையைக் கொடுத்தும் வழங்குவர் பெரியோர்? என்பது இதன் பொருள் . எனவே பெயர்தோறும் வேறுவேறு வினையைச் கொடுத்தல் மரபன்று என்பதாம். ஒரோவழி-சிறுபான்மை .