பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 'தொல்லே நால் வகைத்தோழருந் தூமணி நெடுந்தேர் மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச் செல்வன்தாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லே தொக்கது வளங்கெழு கோயிலு ளொருங்கே? எனத் தினேவிரவிச் சிறப்பினன் ஒருமை முடிபேற்றன. 'நானுமென் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோந் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்? என ஆண்பாலும் பெண்பாலும் விரவிச் சிறப்பினன் ஒரு முடிபேற்றன. தானுந்தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் ?? என்ருற் போல்வன் தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளே யும் விராயெண்ணித் தலைமைப் பொருட்கு வினைகொடுப்பவே தலைமையில் பொருளும் உடன் முடிந்ததோர் முறைமைபற்றி வந்தன என்பர் சேவைரையர் . இருதினேப் பெயரும் விராய்வந்து ஒருதினைச் சொல்லால் முடிதல் வழுவாயினும் செய்யுளகத்ததாயின் அமைகவெனத் திணை வழுவமைத்தவாறு. டுஉ. விளேவேறு படுஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென் ருயிரு வகைய பலபொரு ளொருசொல். இது, பல பொருளொரு சொல்லின் வகைமை உணர்த்துகின்றது. (இ-ள்) வினேயால் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும் வினேயால் வேறுபடாத பலபொருள் ஒருசொல்லும் எனப் பல பொருள் ஒரு சொல் அவ்விருவகைப்படும் எடறு. வேறுபடுத்தற்கண் வினையேயன்றி இனமும் சார்பும் உள வேனும் வினை சிறப்புடைமையின் அதனுற் பெயர் கொடுத்தார்.