பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இங். அவற்றுள், வினே வேறு படுஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. இது, வினே வேறுபடும் பல பொரு ளொரு சொல்லாமாறு உணர்த் துகின்றது. (இ~ள்) மேற்குறித்த அவ் விரண்டனுள்ளும் வினையால் வேறுபடும் பலபொரு னொரு சொல், பொருள் தெரியுங் காலத்து ஒரு பொருட்கே சிறந்த வினையாலும் இனத்தாலும் சார்பாலும் பொதுமை நீங்கிப் பொருள் தெளியத் தோன்றும், எ-து. வேறுப்டு வினை என்றது, ஒரு பொருட்கே சிறந்த வினை யின. இனம் என்றது, ஒரு சாதிக்கண் அனேந்த சாதியினே . சார்பு என்றது, ஒருவாற்ருன் இயைபுடையதனே. மா, வேங்கை என்பன பல பொருளொரு சொல். மா காய்த்தது, வேங்கை பூத்தது என்ற வழி, காய்த்தல் பூத்தல் என்ற வினை யால் மரம் என்பது அறியப் பட்டது. மா ஓடிற்று, வேங்கை பாய்ந்தது என்ற வழி ஓடுதல், பாய்தல் என்னும் வினையால் விலங்கு என்பது அறியப் பட்டது. மாவும் மருதும் ஓங்கின; வேங்கையும் ஞாழலும் வளர்ந்தன என்ற வழி இனத்தின ல் மரம் என்பது அறியப் பட்டது. இத் தோட்டத்தில் நூறு மா உள என்ற வழி மரம் என்பது சார்பினல் அறியப் பட்டது. இப் போர்க்களத்து நூறு மா உள என்றவழி விலங்கு என்பது சார்பினல் அறியப் பட்டது. வேறு படுவினையினும் என்ருரேனும் ஒன்றென முடித்தல் என்பதளுல் வேறு படுக்கும் பெயரும் கொள்ளப்படும். இம் மா வயிரம், இம் மா வெளிறு என்றவழி வயிரம் வெளிறு என்னும் பெயர்கள் மா என்னும் பல பொரு ளொரு சொல்லின் பொதுமை நீக்கி மரத்தினை வரைந்துணர்த்துதல் இங்கு அறியத் தகுவதாகும். டுச. ஒன்றுவின மருங்கின் ஒன்றித் தோன்றும். இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.