பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 (இ-ள்) காலம் முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத் தன்மைய பிறவுமாகிய அவ்வுயர்திணைக்கண் வருஞ்சொல் லெல்லாம் உயர்திணைச் சொல்லாயினும் உயர்திணைக்கண் பால் பிரிந்து இசையா; அஃறிணைப் பாலாய் இசைக்கும்-எ-று. (உ-ம்). காலம் ஆயிற்று; உலகம் உணர்ந்தது; உயிர் பிழைத்தது; உடம்பு நுணுகிற்று; தெய்வம் செய்தது; வினை விளைந்தது; பூதம் புடைத்தது; ஞாயிறு மறைந்தது; திங்கள் தோன்றியது; சொல் நன்று எனவரும். பிறவும் என்ற தல்ை பொழுது நன்று; யாக்கை தீது, விதி வலிது; கனலி கடுகிற்று; மதி நிறைந்தது, வெள்ளி எழுந்தது, வியாழம் உறங்கிற்று என்பன போல்வன கொள்ளப்படும். காலம் என்பது உலகத் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நடுவுமாகி என்றும் உள்ளதோர் பொருள்; என்றது காலக் கடவுளே . உலகம் என்பது மேலும் கீழும் நடுவுமாகி எல்ல்ா வுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள் என்பர் தெய்வச் சிலேயார் . மக்கட்டொகுதி என்பர் சேவைரையர். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் క్రీస్లో தன்மாத்திரையுமாகி வினேயினுற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனே மூலப்பகுதி எனினும் ஆம் என்பர் தெய்வச்சிலேயார், ஈண்டு உயிர் உடம்பு என்பன மக்களது உயிரையும் உடம்பினையும் உணர்த்தின என்பர் சேனவரையரும் நச்சிஞர்க்கினியரும். பால்வரை தெய்வம் என்றது, எல்லாவுயிர்க்கும் இன்பத் துன்பத் திற்குக் காரணமாகிய இரு வினேயையும் வகுத்து நுகர்விப்ப தாகிய பரம் பொருளே. பால்வரை தெய்வம் என்னும் இத் தொடர்க்கு ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள்? எனப் பொருளுரைப்பர் தெய் வச் சிலேயார். வினே என்பது இருவினைத் தெய்வம். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயமாகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள்செய்வது. சொல் என்பது நாமகளாகிய தெய்வம்.