பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 எனவரும் நன்னூற் சூத்திரமாகும். மேற்கூறிய அடைசேர் மொழி இனத்துைத் தருதலேயன்றி அதனோடு இனமல்லத&ன யும் தரும் அவ்விடத்திற்குப் பொருந்துமாயின் என்பது இதன் பொருள். பாவஞ் செய்தான் நரகம் புகும்’ என்றவழி புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருதலேயன்றி, அவன் இது செய்யின் இதுவிளேயும் என்னும் அறிவிலி' என்னும் இனமல்ல தனையுந் தந்தது. இனி 357. ஒரு மொழி யொழி தன்னினங் கொளற்குரித்தே. என்னும் நன்னூற் சூத்திரமும் இங்கு ஒப்பவைத்து நோக்கத் தகுவதாகும். 'பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் ஒன்றே நின்று ஒழிந்த தன்னினங்களையும் தழுவுதற்குரித்தாம் என் பது இதன் பொருள். நேஞ்சுண்டான் சாம்? என்றவழி நின்ற நஞ்சுண்டான் என்ற பெயரும் சாம் என்னும் வினேயுமாகிய ஒருமொழிகள் நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டவை சாம் எனத் தமக்கு இனமானவற்றையும் தழுவின. நன்னூற் சூத்திரமாகிய இது, பொருள் வகையால் தொல்காப்பியத்தை அடியொற்றியதென்பது, ஒரு பாற்கிளவி யேனேப் பாற்கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப?? (பொருளியல சூ-உஅ) என்ருர் மெய்ந்நூலார் தொல்காப்பியனர் என மயிஜலநாதர் இச் சூத்திரவுரையுள் எடுத்துக்காட்டுதலால் இனிது புலனும். கூஉ. கண்ணுந் தோளு முலேயும் பிறவும் பன்மை சுட்டிய சினேநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினக் கியலும் எழுத்தலங் கடையே. இது, திணைவழுக் காக்கின்றது. (இ ள்) கண்ணும் தோளும் முலேயும் அவைபோல்வன பிறவும் பன்மையைக் குறித்து நின்ற சினே நிலையை யுணர்த்திய