பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வேற்றுமையியல் வேற்றுமையிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற் றுமையியல் என்னும் பெயருடையதாயிற்று. கிளவியாக்கத்துள் பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்தினர். அப்பொதுவிலக்கணத்தினத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங் கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமை என்பன ஒருசார் பெயரும் இடைச் சொல்லும் ஆதலின் அவற்றின் இலக்கண மும் பொதுவிலக்கண மெனப்படும். இந் நுட்பத்தினைக் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்கும் இடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக் கொண்டார். வேற்றுமை யிலக்கணம் என்பது பொருளால் ஒன்ருயினும், சிறப்புடைய எழுவகை வேற்று மைகளும், அவற்றது மயக்கமும் எட்டாவதெனப்படும் விளி வேற்றுமையும் தனித்தனி இயல்களால் உணர்த்தத் தகும் பொருள் வேறுபாடுடைமையின், அவற்றை வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு என மூன்றியல்களால் உணர்த்தினர். வேற்றுமை யியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேன வரையரும் நச்சினர்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங் களாகத் தெய்வச்சிலேயாரும் பகுத்து உரை வரைந்துள் ளார்கள். வேற்றுமை என்பன பெயர்ப்பொருளே வேறுபடுத்தும் உருபுகளாகும். இவ்வுருபுகள் செயப்படுபொருள் முதலியன வாகப் பெயர்ப் பொருளே வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமை யாயின எனவும், செயப்படு பொருள் முதலாயினவற்றின் வேறு படுத்துப் பொருள்மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் பெயர்க் காரணங் கூறுவர் சேன வரையர் பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங்