பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 குறித்து அவற்ருல் தான் வேறுபட நிற்றலசனும் முடிக்குஞ் சொல்லேத் த்ான் விசேடித்து நிற்றலா னும் எழுவாயும் வேற்று மையாயிற்று என்பர் நச்சிர்ைக்கினியர். ஒரு பொருளே ஒரு கால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக் கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்கநிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு தம்மை யேற்ற பெயர்ப் பொருளே வேறு படுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித் தொடர் கூறி, இனி வேற்று மைத் தொடர் கூறுகின்ருர் என்றும் கூறுவர் தெய்வச்சிலேயார் . சுங். வேற்றுமை தாமே ஏழென மொழிப. இது, வேற்றுமை இனத்தென்கின்றது. (இ-ள்) வேற்றுமை என்று சொல்லப்படுவன எழுவகைய எ- று. சுச. விளிகொள் வதன் கண் விளியோ டெட்டே. இது முன் கூறியதல்லாத மற்ருெரு வேற்றுமை,புங் கூறி வேற்றுமைகளின் தொகை கூறுகின்றது . (இ-ள்) விளியேற்கும் பெயரின் கண்ணதாகிய விளியோடு முற்கூறியவற்றையுங் கூட்டியெண்ண வேற்றுமை எட்டாம் எ-று. விளிகொள்வது என்றது, பெயரை. அதன்கண் விளி என்றது, பிறிதோர் இடைச்சொல்லே ஏலாது தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதியின. வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். படர்க்கைச் சொல்லேயும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளிவேற்றுமையாதலின் இதனே எழுவாயுள் அடக்காது தனிவேற்றுமையாகக் கொள் வதே தமது துணிபென்பார், வேற்றுமை தாமே ஏழென மொழிப? எனப் பிறர் மதங்கூறி விளிகொள் வதன்கண் விளி யோடெட்டே? எனத் தம் துணிபுரைத்தார் தொல்காப்பியர்ை. இவ்விரு சூத்திரப் பொருளேயும் தழுவியமைந்தது, 6