பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 290. ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீருய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். தம்மை ஏற்றுக் கோடற்குரிய எவ்வகைப்பட்ட பெயர்கட் கும் இறுதியாய் அப்பெயர்ப் பொருளே வேற்றுமைப் படுத்துவன வான வேற்றுமைகள் எட்டேயாம்?’ என்பது இதன் பொருள். வேற்றுமை செய்தலால் வேற்றுமையெனப்பட்டன. வேற்றுமை யென்னுங் காரியத்தைச் செய்யுங் கருத்தாவாகிய வேற்றுமை யுருபிற்கு வேற்றுமையெனப் பெயர்போந்தது காரியவாகு பெயராகிய காரணக்குறி என்பர் சிவஞானமுனிவர். கூடு. அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி என்னு மீற்ற. இது வேற்றுமைகளின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ-ள்) எட்டெனப்பட்ட வேற்றுமையாவன பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளியென்று சொல்லப்பட்ட ஈறுகளேயுடைய எ-று. பெயர் தானே ஈருகியும் பிற எழுத்தோடு கூடி ஈருகியும் வருமென்பார் பெயர். விளி என்னும் ஈற்ற என்றர். பெயர் என்றது, பெயர் தோன்றும் நிலையதாகிய எழுவாய் வேற்றுமை யி ஜன. ஐ இரண்டாவதன் உருபு ஒடு மூன்ருவதன் உருபு. கு நான்காவதன் உருபு இன் ஐந்தாவதன் உருபு. அது ஆருவதன் உருபு. கண் ஏழாவதன் உருபு. விளியிருவன திரிந்தும் இயல்பாயும் விளிக்கண் வரும் எழுத்துக்கள். சிறப் புடைப் பொருளேத் தானினிது கிளத்தல் என்பதல்ை இவை எடுத்து ஒதப்பட்டன. எடுத்தோதாதன மூன்ரும்வேற்றுமைக் கண் ஆன் ஆல் ஒடு என்பனவும் ஆரும் வேற்றுமைக்கண் ஆது என்னும் ஒருமையுருபும் அ என்னும் பன்மையுருபும் ஏழாம் வேற்றுமைக்கண் இடப் பொருண்மையுணர்த்தும் கால் புறம் அகம் முதலிய சொற்களுமாகும்.