பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


உரைகண்ட இடங்களும் சிலவுள. தொல்காப்பியப் பொருளதி காரத்திற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதிய உரைப்பகுதிகளை ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இவ்வுண்மை புலனாம்.

தொல்காப்பியவுரையாசிரியர்கள் காலச் சூ ழ் நிலை ை: யொட்டித் தொல்காப்பிய உரைகளில் இடம்பெற்ற அயலவர் கொள்கைகளை இவையென ஆராய்ந்து விலக்கி, ஆசிரியர் தொல் காப்பியனார் காலத்தொன்மையினையுளங்கொண்டு தொல்காப் பியப் பொருளதிகாரப் பகுதிக்குப் புத்துரை காணவேண்டும் என்னும் வேட்கை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் தலைமையினை மேற்கொண்ட பேராசிரியர் நாவலர் ச. சோம சுந்தரபாரதியாரவர்கள் உள்ளத்தே முகிழ்த்தெழுந்தது. அதன் பயனாகத் தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதிக்குப் புத்துரை காணும் பணி அவர்களால் தொடங்கப்பெற்றது. தொல்காப்பி யத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றியல்களுக்கு நாவலர் பாரதியார் அவர்கள் புத்துரை வரைந்துள்ளார்கள்.

தமிழின் எழுத்து, சொல் ஆகியவற்றின் அமைப்பினையும் பொருள்புலப்பாட்டு நெறியினையும் ஒப்ப விளக்கும் இயற்றமிழ்த் தொன்னுாற்பொருளை உள்ளவாறுணர்ந்து தமிழ் மொழியினைப் பேணிவளர்த்தற்கும் பண்டைத் தமிழ் மக்களது அகம் புறம் என்னும் வாழ்வியலமைப்பினைத் தொல்காப்பியமாகிய இலக் கணத்தோடும் சங்க இலக்கியம் திருக்குறள் முதலிய தொன்மை யிலக்கியங்களோடும் ஒப்புநோக்கியுணர்தற்கும் பெருந்துணைபுரிந் துள்ளன. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்கள் ஆராய்ந்தெழுதிய பழையவுரைகளாகும் , தொல்காப்பியம் பயில்வோர் அந்நூலுக்கமைந்த எல்லாவுர்ை களையும் வரலாற்று முறையில் ஒருசேரத் தொகுத்து உரையர் சிரியர்கள் கூறும் உரைவேறுபாடுகளைப் பகுத்து ஆராய்ந்து நூலாசிரியராகிய தொல்காப்பியனார் கருதிய பொருள் இதுவாக இருத்தல் வேண்டும் எனத் தெளிந்துணரும் முறையில் தொல் காப்பியப் பொருளதிகாரத்துக்கு ஒர் உரைவளப்பதிப்பு வெளி யிடுதல் இன்றியமையாதது என்பதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். தமிழ் நிலைபெற்ற மதுரைமாநகரில் தோன்றிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இத்தமிழ்ப் பணியினை 1965இல் தொடங்கியது.