பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-இ శ్రీ 5

படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து கொண்டு பகைவரொடு பொருதற்கு வாய்ப்பாக மிகப்பெரிய தமிழ்ப் படை வீரர்கள் சூடிக்கொள்ளுதற்குரிய பனை வேம்பு ஆத்தி என்னும் மூவகைப் பூக்களும், தம் நாட்டார் வெற்றி பெறுதல் வேண்டி மகளிர் முருகனைப் பரவி யாடும் வள்ளிக் கூத்தும் (போர்க் களத்திற்) புறமுதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணிந்த கழவின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந் தனது வெற்றியை உள்ளத்தில் எண்ணி, நாடாள் வேந்தனாகிய அவனுக்கு நன்மையும் தீமையும் புலப்படுத்தும் இயல்பினதாகிய உன்னம் என்னும் மரத்தொடு பொருந்த நிமித்தங்கொள்ளு தலும், (காட்டகத்து அலரும் காயாம் பூவின் மலர்ச்சியைக் கண்டோர்) பூவைப்பூ மேனியாகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது கெடாத பெரும் புகழாகிய பெருஞ்சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலாகிய பூவை நிலையும், பொறுத்தற்கரிய போரின்கண் (வெட்சி மறவராகிய) பகைவரைப் புறங்கொடுத்து ஓடச் செய்தலும், (அவராற் கவர்ந்து கொள்ளப் பட்ட பசுக்களை மீட்டுத் தன்னாட்டிற் கொணர்ந்து தருதலும், (இவ்வாறு மீட்டுக் கொணர்ந்ததற்குரிய தறுகண்மையால் உளவாம்) புகழ் நிறைந்த தம் வேந்தனது சிறப்பினைப் படை மறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், வீரனொருவன்) தன் பாலமைந்த வஞ்சினத்தைத் தன்னொடு சார்த்திக் கூறுதலும், அங்ங்ணம் நிரைமீட்டலை மேற்கொள்ளும் முறைமையினையுடைய வீரர்கள் போர்ப்பூவாக அணிந்த கரந்தையின் சிறப்புரைத்தலும், தம்மேல் எதிர்த்து வரும் சேனையின் முன்னணியாகிய தார் (தூசி)ப் படையினைத் தான் ஒருவனாகவே தனித்து நின்று தடுத் தலும் (அந்நிலையிற்) பகைவரது வாளாற் பட்டு வீழ்தலும் எனப் பின்விளைவறியாது மேற்கொள்ளும் போர்ச்செயல்களாகிய இரு வகைப்பட்ட பிள்ளைநிலையும் வாளாற் பொருது பகைவரை வென்று மேம்பட்டு எழுந்த வீரனாகிய இளைஞனை அந்நாட்ட வர்கள் மகிழ்ந்து அவனுக்குத் தம் நாட்டினைப் பரிசாக வழங்கிய பிள்ளையாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற்பொருட்டு அதற்கு ஏற்புடைய கல்லைக் காணுதல், அக்கல்வினைக் கைக்கொள்ளுதல், கொண்ட கல்லினை நீர்ப்படுத்தித் தூய்மை செய்தல், அக்கல்லினை நடுதல், அங்ங்ணம் நட்ட கல்லிற்குக் கோயில் எடுத்தல், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதல் என்று சொல்லப்பட்ட கற்கோள்நிலை ஆறும்