பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛ó° தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இத்திணையும் நிரைகோடலும் நிரைமீட்டலுமாகிய இருவேறு தொழில் குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறும் என்றும், அவ்விரு வகையுள் நிரைகோடற் பகுதியை விரித் துரைப்பது படையியங்கரவம் எனத் தொடங்கும் சூத்திரம் என்றும், நிரைமீட்டற் பகுதியை விரித்துாைப்பது 'வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் இச்சூத்திரம் என்றும் இளம்பூரணர் கூறிய கருத்துரைப் பகுதிகள், புறத்திணை ஏழெனக் கொண்ட தொல்காப்பியனார் கொள்கைக்கும் புறத்திணை பன்னிரண் டெனப் பகுத்த பன்னிருபடல முதலிய பின்னூலார் கொள்கைக் கும் இடையேயமைந்த தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

'வெறியாட்டயர்ந்த காந்தள் முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளைப் பகுத்து எண்னுமிடத்து, காந்தள், போந்தை வேம்பு, ஆர், வள்ளி, சழனிலை, உன்னநிலை, பூவை நிலை, ஆரம ரோட்டல் ஆபெயர்த்துத் தருதல், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் எனப் பன்னிரண்டாகும். இவற்றுடன் அனைக்குரி மரபினது கரந்தை என்பதனையும் இருவகைப்பட்ட பிள்ளைநிலை, பிள்ளை யாட்டு என்னும் இரண்டினையும் கற்கோள் நிலை ஆறினையும் சேர்த்தெண்ணத் துறை எழு மூன்றாதல் காணலாம். இனி, அனைக்குரி மரபினது கரந்தை' என்பதனை ஒரு துறையாகக் கொள்ளாமல் காந்தள்முதல் நெடுமொழி புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளின் தொகுப்பாக்கி, வருதார்தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலை யினையும் இரண்டு துறைகளாக எண்ணி எழு மூன்றாக்கினும் அமையும,

போந்தை சேரமன்னர்க்குரிய பூ. வேம்பு பாண்டியர்க்குரிய பூ. ஆர் (ஆத்தி) சோழர்க்குரிய பூ. "நிரைகோள் கேட்டவழி நெடுநில வேந்தரும் கதுமென எழுவராதலின் நிரைமீட்டலின் கண் பூப்புகழப்பட்டது” என்பர் இளம்பூரணர். பூவை நிலை யென்பது காட்டகத்து மலர்ந்த காயாம்பூவின் மலர்ச்சியைக் கண்டு மாயோனிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச்செல்வோர் அப்பூவையைக் (காயாம் பூவைக்) கண்டு கூறுதல், எனவும், உன்னம் கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு’ எனவும், இஃது உரையன்றென்பர்