பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-டு அடு

மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவை நிலை என்ப' எனவும் துறைவிளக்கங் கூறுவர் இளம்பூரணர். பூவைப்பூ: மேனியாகிய மாயோனை ஞாலங்காவல் பற்றி மன்னரொடு உவமித்தலே பூவை நிலை என விளக்குவர் மாயோன் மேய மன் பெருஞ்சிறப்பின்...தாவா விழுப்புகழ் பூவை நிலை என்றார் தொல் காப்பியனார். மேய-மேவிய: மேவுதல்-பொருந்துதல்; உவமை யாக இயைதல். மன்பெருஞ்சிறப்பு-மன்னர்க்கு உளதாம் பெருமை வாய்ந்த நாடு காத்தற் சிறப்பு. மன்' எனப் பொதுப் படக் கூறிய அதனான் நெடுநில மன்னர்க்கும் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர். கோவா மலையாரம்' என்பது முதலாக வரும் சிலப்பதிகாரப்பாடல்களும், 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே யென்னும் அருளிச் செயலும் தொல்காப்பியனார் சுட்டிய பூவை நிலையென்னுந் துறையினை அடியொற்றியமைந்தனவாகும். இனி, மாயோனொடு உவமித்தலேயன்றிப் பிற தேவர்களோடு உவமித்தலையும் பூவை நிலையின்பாற்படுத்தல் தொன்றுதொட்டு வரும் புறத்திணையிலக்கிய மரபாகும் என்பது, ஏற்றுவலன் உயரிய (புறம்-56) முதலாக வரும் சங்கச் செய்யுட்களால் இனிது புலனாகும்.

நிரைகோடலும் நிரைமீட்டலும் இருவேறு வினைகளாயினும் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் களவின் ஒருங்கு கூடி நிகழ்த்தும் குறிஞ்சித்திணை ஒழுகலாறு போல, ஒத்த தறுகண்மை யாளராகிய வெட்சி மறவர் என்னும் இருதிறத்தாரும் ஒரு காலத்து ஒருங்கு கூடி நிகழ்த்தும் போர்ச் செயலாதலின் இவற்றை வெட்சித்திணையென ஒரு திணையாகவே கொள்ளுதல் வேண்டும் என்பது தமக்கு முற்பட்ட தமிழியல் நூலோர் துணி பாதலின் நிரைகவர்தலும் நிரைமீட்டலும் ஆக உடனிகழும் இப். போர்ச் செயல்கள் இரண்டினையும் வெட்சி என ஒரு திணை யாகவே கொண்டார் தொல்காப்பியனார். குறிஞ்சிப் புறனாய் வெட்சியில் அடக்கப் பெறும் நிரைமீட்டற் பகுதிக்குரிய துறைகள் பலவற்றையும் சூடும் போர்ப்பூவினால் அனைக்குரி மரபினது கரந்தை' என ஒன்றாக அடக்குவர் தொல்காப்பியர். இவ்வாறு வீரர்கள் வெட்சியும் கரந்தையும் சூடி இருதிறத்தினராகப் பொருதல் கருதிப் பன்னிருபடல நூலாசிரியர் நிரைகோடற் பகுதி யாகிய துறைகளை வெட்சியெனவும் நிரைமீட்டற் பகுதியாகிய துறைகளைக் கரந்தைத்திணையெனவும் இருவேறு திணைகளாக.