பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


వి: : தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

அமைத்துக்கொண்டனர். நிரைகோடல், நிரை மீட்டல் இவை ஒன்றற்கு ஒன்று மாறாய் நிகழ்தல் கருதி வெட்சியுங் கரந்தையும் தம்முள் மாறே என்ற இலக்கணக் கொள்கையும் பிற்காலத்தில் தோன்றி நிலைபெறுவதாயிற்று.

நிரைமீட்டலைக் கரந்தை எனத் தனித்திணையாகக் கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர், கரந்தை யரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்தொழிதல், ஆளெறிபிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப்பெயர்ச்சி, வேத்தியல் மலிபு, குடிநிலை எனப் பதின் மூன்றும் கரந்தைத் திணைக்குரிய துறைகளாகக் குறித்துள்ளார். இத்துறைகளுள் ஆளெறிபிள்ளை, பிள்ளைத்தெளிவு, பிள்ளை யாட்டு, பிள்ளைப்பெயர்ச்சி என்பன தொல்காப்பியனார் குறித்த "வருதார்தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப் பட்ட பிள்ளைநிலை', 'வாண்மலைந்தெழுந்தோனை மகிழ்ந்து பறை துரங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டு என்னும் துறைப் பெயர்களை அடியொற்றியமைந்தனவாகும். 'தலைத்தாள் நெடு மொழி தன்னொடு புணர்த்தல் என்னுந் தொல்காப்பியத் தொட ரினை அடியொற்றியமைந்தது, நெடுமொழிகூறல் என்னும் துறை யாகும். வெண்பாமாலை போர்க்களத்தொழிதல் என்ற துறை தொல்காப்பியம் கூறும் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்ற துறை யில் அடங்கும். தொல்காப்பியத்தில் மறங்கடைக்கூட்டிய குடி நிலை" என்ற பாடத்தை யொட்டியமைந்தது, புறப்பொருள் வெண்பாமாலை கூறும் குடிநிலை என்ற துறையாகும். சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் என்ற தொல் காப்பியத் தொடர்ப் பொருளைத் தழுவியமைந்தது வேத்தியன் மலிபு என்னும் துறையாகும். கரந்தையரவம், அதரிடைச் செலவு என்பன, முறையே படையியங்கரவம், புடைகெடப் போகிய செலவு எனவரும் நிரைகோடற்பகுதியாகிய வெட்சித் துறைகளை நிரை மீட்டற்கும் உரியவாக அமைத்துக்கொள்ளப் பெற்றன வாகும். போர்மலைதல், புண்ணொடு வருதல், கையறுநிலை என்பன பன்னிருபடலமுடையார் தாமே புதியனவான அமைத்துக் கொண்ட துறைகளாகும். 'பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினரா லெனின், புண்படுதல் மாற்றார் செய்த மறத்துறையாகவின் அஃது இவர்க்கு (தொல்காப்பியர்க்கு) மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக்