பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-சு يغ فيه

'கான்யாறு தழி இய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளை இப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி’

(பத்துப்-முல்லைப்: உச-உ அ) என்பதனா னுணர்க.

சு-(அ) எஞ்ச1 மண் ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுத த் தலைச்சென் ற - ல் குறித் தன்றே. இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்னபொருட் டென்கின்றது.

(இ ஸ்) எஞ்சா மண் நசை-இருபெருவேந்தர்க்கும் இடை யீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைச் சென்று-ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந்நாட்டி டத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று-ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தன் மாத்தி ரைத்து வஞ்சித்திணை என்றவாறு.

ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண் ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசை யான் மேற்சேறல் உளதாகவின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவ ரென் றுணர்க. எதிர் சேறல் காஞ்சி என்பராலெனின், காஞ்சி யென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெய்ராற் கூறலா காமை யுணர்க. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது

  • தொல், பொருள். புறத்-உ.உ.

1. எதிர் சேறல் க | ஞ்சி என் பராலெனின் என வரும் இவ்வுரைத் தொடர் ‘'எதிரூன்றல் காஞ்சி என்பரா லெனின் என்றிருத்தல் பொருத்தமாகும்.

தன் மேற் படையெடுத்து வரும் பகைவேந்த்னது சேனை தனது நாட்டெல் லையிற் புகு தற்கு முன்னரே தன் படையுடன் முன் சென்று பகைவர் சேனை யினைத் தடுத்து நிறுத்தலும் நாடாள் வேந்தர்கள் மேற்கொள்ளுதற் குரிய போர் வகைகளுள் ஒன்றாதலின், அங் மனம் தனது நாட்டின் எல்லையில் முன் னின்று பகைவரது சேனையைத் தடுத்து நிறுத்துதலாகிய போர்ச் செயலே எத ஆன்றல எனப்படும். இங்ஙனம் பல்லாற்றானும் நில்லாவுலகத்தைப் பற்றி நிற்றலாகிய இச் செயல் தொல்காப்பியனார் கூறிய காஞ்சித் திணை யின்பாற் படுதலின எதிரு ) லாகிய இப்போர்ச்செயலை இளங்கோவடிகள் முதலியோ ர் காஞ்சித்தினை எ னவே கொண்டனர் என்பது,

தென றிசையென்றென் வஞ்சியொடு வடதிசை நின்றெதிமூன்றிய நீள் பெருங் காஞ்சியும்: (வஞ்சி-காட்சி) என வரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது புலனாம். - -