பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துறையில் முப்பதாண்டு களுக்கு மேற் பணியாற்றி ஒய்வுபெற்று மதுரை சோமசுந்தரபுரம் குடியிருப்பில் வாழ்ந்தவரும் என்னுடைய ஆசிரியப் பெருந்தகை யும் ஆகிய வித்துவான் மு. அருணாசலம்பிள்ளையவர்கள், இந்தியப் பல்கலைக்கழகப் பொருளுதவிக்குழு பல்கலைக்கழகத்திலிருந்து ஒய்வுபெற்ற ஆசிரியர்களுக்கென அமைத்த ஆய்வுத் திட்டத்தின் அடிப்படையில் மதுரைப்பல்கலைக்கழகத்திலமர்ந்து தொல்காப் பியப் பொருளதிகார உரைவளமாகிய இப்புலமைப் பணியினைத் தொடங்கிச் சிறந்த முறையில் நிகழ்த்தி வந்தார்கள். தொல்காப் பியப்பொருளதிகாரத்தின் முதலியல் ஆகிய அகத்திணையியலுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியவுரைகள் இரண்டும் எனது வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய பேராசிரியர் கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் அவர்கள் எழுதிய புத்துரையும் என மூன்று உரைகள் உள்ளன. வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்கள் அகத்திணையியலுக்குக் கிடைத்துள்ள இம்மூன்றுரைகளையும் சூ த் தி ர ந் தோறு ம் ஆராய்ந்து, காலமுறைப்படி அமைத்து இன்றியமையாத உரை விளக்கங்களை அவ்வவ்வுரைகள்தோறும் அடிக்குறிப்பாகத் தந்து அவற்றின் முடிவில் அச்சூத்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் தமது ஆய்வுரையினை யமைத்து அகத்திணையியல் உரைவளத்தினை நிறைவு செய்துள்ளார்கள்; திரு. பிள்ளையவர் களது ஆராய்ச்சியின் பயனாக உருவாகிய அகத்திணையியல் உரை வளம் 1972-இல் மதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் வெளியிடப்பெற்றது.

தண்ணார் தமிழளிக்குந் தென்பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரை மாநகரின் பாங்கர்த் தோன்றிப் பல்வேறு கலைத் துறைகளையும் தமிழ்மொழி வாயிலாகப் பரப்பும் பணியினைத் தனது குறிக்கோளாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்த் தொன்னூல்களை முறைப்பட ஆராய்ந்து ஆய்வு நூல்கள் பல வெளியிடும் நோக்குடன் தமிழ்த்துறையின் கிளவி யாகத் தமிழியற்புறம் (HAMILOLOGY) என்ற பெயருடன் தமிழாராய்ச்சித் துறையினை இரண்டாண்டுகட்குமுன் நிறுவியது. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பல்லாண்டுகள் பணி யாற்றி ஓய்வுபெற்ற அறிஞர் சிலரை ஒப்பந்த முறையில் ஆய்வாள ராக நியமித்துத் தமிழாராய்ச்சி தொடர்ந்து நிகழ வழியமைத் துள்ளது. தமிழியற்புலத்து ஆய்வாளருள் ஒருவராக நியமிக்கப்