பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


കൾ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தன்மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும்." அது சேரமான் செல்வுழித் தகடுரிடை அதிகமான் இருந்ததாம். இங்ங்ணம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற் கூறுந் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென் றுணர்க." (எ)

பாரதியார்

கருத்து :- இது வஞ்சிப்புறத்திணை முல்லை என்னும்

அகத்திணைக்குப் புறனாம் என்கின்றது.

பொருள் :- வெளிப்படை.

குறிப்பு :- முதலேகாரம் பிரிநிலை, புறத்திணை ஏழனுள் வஞ்சியைப் பிரித்தலின் ஈற்றேகாரம் இசைநிறை அசை எனினும் அமையும்.

(1) அகத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் அல்லது வினைமேற் செல்வதுபோல, வஞ்சித் தலைவனும் தலைவி யைப் பிரிந்து பகைமேற் செல்லுதலானும், (2) முல்லையிலும் வஞ்சியிலும் தலைவரைப் பிரிந்த தலைவியர் தனிமை தாங்காது வருந்திக் கற்பறம் பேணி யிருப்பது பொது ஒழுக்கமாதலானும்,

(3) முல்லைத் தலைவர் தம் புலம்புறு தலைவியரைப் பிரிந்து செலவு மேற்கொள்வது மனையறம் பேணும் கடனிறுக்கும் பொருட்டாதல் போலவே, வஞ்சித்தலைவர் மேற்செலவும் ஆண்மையறம் பேணும் பொருட்டாதலானும், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று.

6-(அ).

கருத்து :- இது, முல்லைக்குப் புறன் என்ற வஞ்சித் திணையின் இயல்பை விளக்குகின்றது.

பொருள் : எஞ்சா மண்ணசை வேந்தனை-தணியாத பிறர் மண் ஆசையுடைய ஒரு வேந்தனை; வேந்தன்-(அறமறமுடைய) பிறிதொரு மன்னன்; அஞ்சு தகத் தலைச் சென்று-அவன் வஞ்ச

2. ஒருவன் மற்றொருவனது நாட்டின் மேற் படையெடுத்துச் சென்றால் அந் நாட்டி ற்குரியவன் தனது நாடழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மேற்சேறலுளதாகலின், இருவரும் வஞ்சி வேந்தராவர் என்பதும், வேந்தனொரு வன் ஒருவன்மேற் சென்று.ழி மற் றையான் எதிர்செல்லாது தன்மதிற் புறத்து வருமளவும் எதிர்நோக்கி இருப்பி ன் அஃது உழிஞையின் அடங்குமென் தும், சேர மான் பெருஞ்சேரலிரும்பொறை தகடூர் மேற் ப ை.யெடுத்துச் சென் போது தகடு ரிடை அதிகமான் இருந்தது உழிஞைத்தினை யாம் என்பதும் நச்சிாைர்க்கினியர் கருத்தாகும். ஒப்பக் கூறலாவது, ஒன்றற்குக் கூறிய இலக்கணம் அதனை யொத்த ஏனையதற்கும் பொருந்துமாறு கூறுதல்,