பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ද් I_. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

டேனும் அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி வஞ்சி யொழுக்கமெனச் சிறப்பித்து ஒரு திணை வகை யாக்குவது, 'அறனறிந்து மூத்த அறிவுடைய தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும். அஃது அவர் கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது. இச்சூத் திரத்தில் எஞ்சா மண்ணசை யாலிரு வேந்தர்’ என்னாமல் 'எஞ்சா மண்ணசை வேந்தனை” என்றமைத்ததால் முன்னுரை காரர் பொருள் தொல்காப்பியர் கருத்தன்று என்பது தேற்ற மாகும்.

படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்க மாயின் அது உயரொழுக்கமாகாமல் துன்பம்தவாஅதுமேன்மேல் வரும் இழுக்காகும். இனி, மண்வேட்கையால் தன் மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளா விருப்பது ஆண்மையற மழிப்பதாகும். அதனால் தன்னாட்டின் மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல் மன்னன் வலி பெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்க படையொடு தான் சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அது செய்யானை எஞ்சா மண்ணசையுடையான் வஞ்சத்தால் வலி மிக வளர்ந்து வாய்த்தபோது வந்து தடிவனாகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடையானை வென்றடக்கி ஆண்மையற மாற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை, அதனையே இச்சூத்திரம் விளக்குகின்றது. இளம்பூரணரும் அதுவே தொல்காப்பியர் கருத் தாகக்கொண்டு இச்சூத்திரத்திற்கு ஒழியாத மண்ணைநச்சுதலை யுடைய வேந்தனை வேறொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித்தது’ என்று நேரிய உரை கூறுகின்றார்.

இச்செம்பொருள் சூத்திரச் சொற்கிடயைால் தெளிவாகவும் அதைக் கொள்ளாமல், எஞ்சா மண்ணசையைப் படையெடுத்துச் செல்லும் வஞ்சி வேந்தனுக்கு ஏற்றிக் கூறினது அறங்கருதா மறம் பேணி அயலார் மண்ணிலாசை வைத்துப் போர் மேற் கொள்ளுவதை போற்றத்தகும் மன்னர் ஒழுக்கமெனப் பேசும் ஒரு சில வடநூற் கூற்றைப் பண்டைத் தமிழரின் இழுக்கறு போரற ஒழுக்கம் விளக்கும். இப்புறத்திணைச் சூத்திரக் கருத்தாகக் காட்ட முயலும் விருப்பின் விளைவாகும். இவ்விருப்புக் காரண மாக இடைக்கால உரைகாரர் படைத்துக் கூறும் குறிப்புரையில் ஒவ்வாத முரண்பாடுகள் மலிவதும் இயல்பாகும். அல்லதனை