பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் التي يبلغ

வந்த மாற்றானை எதிர்த்து மலைதல் வஞ்சியாகாமல் வேறு தும்பைத்திணையாகும் எனத் தொல்காப்பியர் தெளியக் கூறு வதற்கு இவர் கொள்கைமுழுதும் முரணாகும்.

தும்பை தானே

மைந்துபொருளாக வந்த வேந்தனைச்

சென்றுதலை பழிக்கும் சிறப்பிற் றென்ப

இது தொல்காப்பியர் தரும் தும்பைத் திணைவிளக்கம். எனவே, "பிறர் நாட்டின் மேற் செல்லுதலே வஞ்சித்திணையென் பதும் அப்படி வரும் மாற்றானை எதிர்சென்று மலைதலே தும்பைத்திணையென்பதும்’ தமிழர் புறத்திணை மரபுகள்’ என்று தொல்காப்பியர் ஐயமற விளக்கியுள்ளார். இத்தகைய போரறச் சிறப்பு முறையைப் போக்கிப் பொருந்தா ஆரிய முறைகளைப் புகுத்திப் புத்துரை கூற முயன்றதால் வந்த முரண்பாடுகள் இவை. இன்னும் இத் தும்பைவிளக்கம் வஞ்சியியல்பைத் தெளிப்ப

தற்கு ஒருவாறு உதவுகின்றது. மேற்செல்லும் வஞ்சி வேந்தனுக்கு வஞ்சித்தினைச் சூத்திரத்தில் அடை எதுவும் சுட்டப்படவில்லை. அதற்கு மாறாக மண்ணசையுடைமை படையெடுக்கப்படும் வேந்த னுக்கு அடையாகக் குறிக்கப்பட்டது. அடுத்த தும்பைத்திணைச் சூத்திரத்தில் மேல் வந்த வேந்தன் படை எடுப்புக்கு மண்ணசை நோக்கம் சிறிதும் சுட்டப்படாததோடு, படையெடுக்கப்படும் மண் ணசைவேந்தனைப் பொருதடக்கும் வலியுடைமை ஒன்றே தக்க காரணமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. மண்ணசையால் வந்த வேந்தன் என்னாது, வாளா வந்த வேந்தன் என முன் கூறியத னோடமையாது, மைந்து பொருளாக வந்த வேந்தனை' என்று தும்பைச் சூத்திரம் நோக்கம் தெளிப்பதினால், வஞ்சி வேந்தனின் பழுதற்ற போர் நோக்கம், பிறர் மண்ணசையன்று, அடுத்திருந்து மாணாது செய்வான் பகை, கொடுத்தும் கொளல் வேண்டு’ தலின், மண்ணசையுடைய வேந்தன் ஒருவனைப் பொருதடக்கும் வலியேயாம் என்பது விளக்கமாகும். முன்னுரைகாரர் கூறுமாறு மேற்செலவுக்கு மண்ணசையைக் காரணமாக்குவது தொல்காப் பியர் கருத்தாமேல் வஞ்சிச் சூத்திரத்தில் மேற்செல்லும் வேந்த

2. படையுடன் மேற்சென்ற வஞ்சி வேந்தனை நாடாள் வேந்தன் தானும் அவ்வாறே படையுடன் மேற்சென்று பொராது தனது நாட்டெல்லையுடன் நின்று அவனது படையினைத் தடுத்து நிறுத்துதல் காஞ்சித்திணையாம் என்பது பன்னிரு படலமுடையார் கொள்கையாகும். எதி குன்றலாகிய இப்போர் நிகழ்ச்சி யினை இருபெரு வேந்தரும் தத்தம் பேராண்மை கரு தி ஒரு களத்துப் பொருத லாகிய சிறப்புடைய தும்பைத்திணையுள் அடக்குவது தொல்காப்பியனார் கருத் தெனக் கொள்ளுதற்கில்லை.