பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா சு இ டு

னுக்கு மண்ணசை கூறாததோடு, மீண்டும் தும்பைத்திணைச் சூத்திரத்திலும் அவனுக்கு மண்ணசை சுட்டாது மைந்து பொரு ளாக என வேறு ஒரு குறிப்புக் கூறியிராரன்றே. இவ்விரு சூத்தி ரங்களிலும் தொல்காப்பியர் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை நோக்கை விலக்கிப் படையெடுக்கப் படுபவனுக்கே அக் குற்ற முடைமை சுட்டியிருப்பதால், மண்ணசையை மன்னர் போரற நோக்கம் ஆக்குவதை மறுத்து வெறுக்கும் தமிழ் மரபே வலியுறுகிறது ?

ஆய்வுரை

நூற்பா சு இது வஞ்சித்திணையின் இலக்கணங்கூறுகின்றது. (இ-ள்) வஞ்சியாகிய திணை முல்லை என்னும் அகத்திணைக் குப் புறனாகும். ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய பகை வேந்தனை மற்றொரு வேந்தன் அவன் அஞ்சும்படி படையுடன்

மேற்சென்று பொருது அழித்தலைக் குறித்தது அவ்வஞ்சித்திணை யாகும். எ-று.

அளவுகடந்த மண்ணாசையுடையனாய்ப் பிறரது மண்ணைக் கவர்ந்து கொள்ளச் சோர்வு பார்த்திருக்கும் பகைமன்னன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே அவன் நடுக்கமுறும்படி அவனை வென்றடக்குதற்கு ஏற்ற காலம் இடம் வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர்கருதிப் படையுடன் மேற் சேறல் நாடாள் வேந்தனது கடமையாதலால் எஞ்சா மண் நசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடுதலைக் குறித்தது வஞ்சித்திணை' என்றார் தொல்காப்பியனார்.

به

3. மண் ணாசை மன்னரது போரறமாக்கும் வழக்கம் சுட்டப்பெறவில்லை. மண்ணாசையாளனாகிய அயல் வேந்தனை நாடாளும் மன்னவன் மேற்சென்று அடர்த்தலாகிய வஞ்சித்திணையைச் சிறப்பிக்கும் நோக் கில் பகைவரது நாட்டைக் கைப்பற்றுதல் வேந்தர்க்குரிய விறலாகும் என்னும் பொதுக் கருத்க உருவாகி,

'பிறர்மண் ணுண்ணுஞ் செம்மல் நின்னாட்டு

வயவுறு மகளிர் வேட்டுணரினல்லது

பகைவர் உண்ணா அருமண் ணினையே?? என்ற பாராட்டுரைகளும் சங்கத் தொகை நூல்களில் இடம் பெறுவனவாயின. மண்ணாசையாற் படையெடுத்துச் செல்லுதல் வேந்தர்க்குரிய அரசியல் நெறி முறையாக நச்சினார்க்கினியர் கூறும் கூற்றுக்கு நாட்டி ற் காலந்தோறும் உண்டாகிய அரசியல் மாற்றம் பற்றிய போர் வரலாற்று நிகழ்ச்சிகளும் அவற்றைப் போற்றிப் புகழும் புறத்தினைப் பாடல்களுமே ஆதச மாவன. அவையன்றி வட நூற் கொள்கையெனத் தனித்ததொரு போர்க் கொள்கை இந்நாட்டில் வழங்காமை யும் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

தொல்காப்பியத்திற்