பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-எ శ్రీ థr

முன்னரே அவனது பேராசையினை ஒழித்துத் தான் அவனை அடக்குதலே என்பதனையும் புலப்படுத்தும் குறிப்பினதாகும்.

7. இயங்குபடை அரவம் எரியசந்து எடுத்தல் வயங்கல் எய்திய பெருமை யானும் கொடுத்தல் எய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருள்.இன்று உய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே. இளம் : இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று."

(இ-ஸ்.) இயங்குபடை அரவம் முதலாகத் தழிஞ்சியொடு கூடச் சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்ற வாறு .

'பெருமை யானும் என்பது முதலாக வந்த ஆன் எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன. இயங்குபடை அரவம் எரிபரந் தெடுத்தல் என்பதன்கண் உம்மை தொக்கு நின்றது."

படை இயங்கு அரவம் - படையெழும் அரவம்.

எரி பரந் தெடுத்தல்-(பகைவரது நாடு) எரி பரந்து கிளர்தல்.

1. இது, வஞ்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று' என்றிருத்தல் வேண்டும்.

2. இந்நூற்பாவில், பெருமையானும், கொடைமையானும், கொற்றத் தானும், நெடுமொழியானும், பெரு ைய்ானும் என்ற தொடர்களில் வந்துள்ள் *ஆன்: எல்லாம் தனக்கெனப் பொருளின்றி இடைச்சொல்லாய் நிற்றலின், இத் தொடர்களிலுள்ள ஆன் என்பதனை நீக்கிவிட்டு முறையே பெருமையும் கொடை மையும், கொற்றமும், நெடுமொழியும், பெருமையும் என எண்ணுதற் பொருளில் எண்னும்மையொடுவந்தனவாகக் கொள்ளுதல் வேண்டும் என்டார். பெருமை யானும் என்பது முதலாக வந்த ஆன் எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன?? என்றார். இயங்கு படையரவமும் எரிபரந்தெடுத்தலும் என எண்ணும்மை விரித் துக் கொள்க என்பதாம்.

  • வஞ்சிதானே? என்பதனை எழுவாயாகக் கொள்ளின் துறை பதின் மூன்றே: ன் பதனைப் பதின்மூன்று துறைத் தே’ என மொழிமாற்றிப் பொருள் கொள்ளு தல் பொருத்தமாகும்.

است.8 سه