பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ) తీ!. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

வயங்கல்’ எய்திய பெருமையும் - விளக்கம் எய்திய பெரு மையும்,

கொடுத்தல் எய்திய கொடைமையும் - கொடுத்தலைப் பொருந்திய கொடைமையும்.

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும்-பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றமும்.

மாராயம் பெற்ற நெடு மொழியும்-மாராயமாகிய உவகை" பெற்ற நெடிய மொழியும்.

பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும்-பகைவரைப் பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும்.

விசைவரு புனலைக்" கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெரு மையும்-விசை கொண்டுவரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவன் தாங்கிய பெருமையும்.

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்-திரட்சி பொருந்தின பெருஞ்சோற்று நிலையும்.

வென்றோர் விளக்கமும்-வென்றோர் மாட்டு உளதாகிய விளக்கமும்.

தோற்றார் தேய்வும்-தோற்றோர் தேய்வு கூறுதலும். குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும் - குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும்.

கொற்றவள்ளை - தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை உதாரணம் வந்துழிக் காண்க.

3. வயங்கல்-விளக்கம்.

4. மாராயம் என்பதற்கு ೭೩೯ಾತ್ತ எனப்பொருளுரைப்பர் இளம்பூ னர், வேந் தனாற் பெறுஞ்சிறப்பு எனப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர்.

5. வருவிசைப் புனலை என்பது, விசை வருபுன ைல? மாற்றிப் பொருளுரைக்கப்பெற்றது. பிண்டம்-திரட்சி.

6. கொற்றவள்ளை என்பது, நெல்முதலியவற்றை உரலிற்பெய்து உலக்கை கொண்டு குற்றும் மகளிர், காம் பாடும் பாடல்களில் வேந்தனது வெற்றித் திறத் தைப் போற்றியுரைக்கும் முறையில் அ ைந்ேத புறத்துறையாகும். இங்கனம் வேந்தனது வெற்றித்திறம் குறித்த பாடல்களில் தோல்வியுற்ற அரசன் பணிந்து கொடுக்குந் திறையும் சுட்டப்படுதல் இயல்பாகும். ஆகவே கொற்ற வள்ளை என்பதற்குத் தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை என விளக்கம் தந்தார் இளம்பூரணர். கொற்றம்-வெற்றி. வள்ளை என்பது உரவில் உலக்கை கொண்டு நெல்முதலியன குற்துங்காற் பாடப்பெறும் இசைப்பாடல் .

என மொழி

"திங்கரும்பு நல்லுலக்கையாகத் செழுமுத்தம்

பூங்காஞ்சி நீழல் அவைப் பார் புகார் மகளிர் : என வரும் சிலப்பதிகார வசிப்பாடலும், திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணமும் இத்தகைய வள்ளைப்பாட்டின் வகையைச் சார்ந்தனவாகும்.