பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9

பெற்ற யான் என்னுடைய ஆசிரியப் பெருந்தகை வித்துவான் மு. அருணாசலம் பிள்ளையவர்களால் தொடங்கப்பெற்ற தொல் காப்பியப் பொருளதிகார உரைவளப்பணியினைத் தொடர்ந்து புறத்திணையியல் முதல் உவமவியல் ஈறாகவுள்ள ஆறியல்களுக் குரிய உரைகளைத் தொகுக்கும் பணியினை நிறைவுசெய் துள்ளேன். தொல்காப்பியத்திற்குக் கிடைக்கும் பழையவுர்ை களுள் தொன்மைவாய்ந்த இளம்பூரணருரை முதற்கண்ணும் அதனையடுத்துக் கிடைக்கும் ஏனையவுரைகள் அதன்பின்னு'சி ஆகக் காலமுறைப்படி சூத்திரந்தோறும் பகுத்து அமைக்கப்பெற் றுள்ளன. ஒவ்வோருரையின்கீழும் உரைப்பகுதிக்குரிய இன்றி யமையாத விளக்கங்கள் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றன. உர்ை யாசிரியர்கள் எழுதிய உரைப்பகுதிகளுள் நூலாசிரியர்கருத்துடன் ஒத்து ஏற்றுக்கொள்ளற்பாலனவும் முரண்படுவனவும் இவையென அடிக்குறிப்பில் உரியவிடங்களில் விளக்கப்பெற்றன. சூந்திரந் தோறும் பழையவுரைகளின் முடிவில் தொல்காப்பிய மூலத்தையடி யொற்றி வரையப்பெற்ற ஆய்வுரை சாய்வெழுத்தில் அமைக்கப் பெற்றுளது.

அச்சுத்தாள்விலை மிகுந்துள்ள இந்நாளில் உரையாசிரியர்கள் உரையிற் காட்டப்பெற்றுள்ள உதாரணப் பாடல்கள் எல்லா வற்றையும் முழுவடிவில் உள்ளபடியே வெளியிடுவதானால் புத்த கத்தின் விலைமிகுதியாகும் என்பதனாலும் தொல்காப்பியத்திற் கமைந்த உரைவேறுபாடுகளை ஒப்புநோக்கி ஆசிரியர் தொல் காப்பியனார் சூத்திரத்திற் சொல்லக்கருதிய பொருள் இதுவென ஆராய்ந்து தெளிந்துணரும் முறையில் ஆய்வாளர்க்குப் பயன்படு முறையில் வெளியிடப்பெறுவது இவ்வாராய்ச்சிப் பதிப்பாத லானும் உரைகளிற் காணப்படும் உதாரணப் பாடல்களின் முகம் குறிப்பும் நூற்பெயரும் பாடல் எண்ணும் சுருக்கித் தரப்பெற் றுள்ளன. உரையாசிரியர்கள் தாம் எடுத்துக்கொண்ட இலக்கணத் தைப் புலப்படுத்தற்குரிய இலக்கியப் பொருளமைதியினையோ பிற குறிப்புக்களையோ உதாரணப் பாடல்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கந்தருமிடங்களில் அவ்வப் பாடற்பகுதிகள் முழுவதும் தரப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு சூத்திரவுரைகட்கும் முடிவில் அமைந்த ஆய்வுரைப் பகுதி முன்னுள்ள பழையவுரைகளையும் அவற்றின் அடிக்குறிப்புக் களாகத் தரப்பெற்றுள்ள உரை விளக்கங்களையும் தழுவிய நிலை யில் மேலும் தடைவிடைகளுக்கிடனின்றித் தொல்காப்பிய