பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-எ 3. Ο ά,

சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது" படைவேண் டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரை யறை செய்தது.

உதாரணம் :

"போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிாஞ்சே சேனாதிப் பட்டத் திவன்.' இது பிறர் கூறிய நெடுமொழி,

'துடியெறியும் புலைய வெறிகோல் கொள்ள மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை யிலங்குவான் மருப்பி னுதிமடுத் துான்றிறு மோடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுத் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மன்ற னன்று முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால் வம்ப வேந்தன் றானை

யிம்பர் நின்றுங் காண்டிசோ வாவே." (புறம்-உஅஎ)

6. முற்கூறியது' என்றது, அடுத்துர்ந்து அட்ட கொற்றம்’ என்னுந் துறை யினை, படைவீரர் போர்க்காலங்களிற் பகைவர் படைகளின் வினை நிலையும் காலநிலையும் முதலிய செவ்விநோக்கித் தாம் விரும்பிய வண்ணம் தத்தம் தகுதிக் கேற்ற போர்ச் செயல்களை மேற்கொள்ளுதற்குரியர் என்பது இத்துறையாற் புலப்படுத்தப்பட்டது என்பதாம்.

7. இஃது என்றது, மாராயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையினை படை வீரர் பலரும் போர்க்களத்தில் தாம் தாம் விரும்பியவாறு தத்தம் பேராண்மை யைப் புலப்படுத்தும் பேராற்றலுடையராயினும் அவ்வீரர் பலரும் ஒருசேரக் குழுமிய சேனைத்தொகுதிக்குத் தக்கான் ஒருவனைத் தலைவனாக்கித் தானைத் தலைவனாகிய அவன் பணித்தவண்ணமே ஏனைப் படைவீரர் அனைவரும் போர்க்களத்தில் வினை செய்தற்குரியர் என வரையறைப்படுத்துவது இத்து ை. என விளக்குவர் நச்சினார்க்கினியர். இவ்விளக்கம்,

நிலைமக்கள் சா ஐ வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில் (படைமாட்சி. கe)

என வரும் திருக்குறளை படியொற்றியமைந்துள்ளமை காணலாம்.