பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


తి0చ్గా தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை யொண்பொழிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்தே நின் றழங்கு குசன் முரசே' * (பதிற்றுப். ட0) என வரும்.

இது பதிற்றுப்பத்து. துறை எனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப் பாற் LGIb.**

வென்றோர் விளக்கமும்-அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சி யாற் நிறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக் கத்தைக் கூறலும்;

தோற்றோர் தேய்வும்-அங்ங்னந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்:

குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்'-வேந்தனது குறை யாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற் றோனை விளங்கக்கூறும் வள்ளைப்பாட்டும்;

வள்ளை, உரற்பாட்டு, கொற்றவள்ளை' தோற்ற கொற் றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர்.

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ-அங்ங்ணம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே

12. துறையெனவே என வரும் இவ்விதப்புக் கிளவி 'கழிபெருஞ் சிறப்பின் துறையெனவே எனத் தனக்குரிய அண்ட்மொழியுடன் சேர்ந்திருத்தல் இதனால் விளக்கப்படும் பொருளுணர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

13. அப்பாற்படும்-பெருஞ்சோற்று நிலையென்னும் அத் துறையின்பால் அடங்கும் .

14. குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை' என்றது, வென்ற வேந்தனது புகழ், விளக்கமும் தோற்ற கொற்றவன் அவனுக்குத் திறைப்பொருள் தந்து அடங்கி வாழ்தலும் ஆகிய குறையாத பெருஞ்சிறப்பினை நெல் முதலியன குற்றும் பெண்டிர் தாம் பாடும் பாடலில் இயைத்துப்பாடுதற்கேற்ற வகையில் நிகழும் போர்த் துறையாகும். r.

13. கொற்றவள்ளை' என்னும் இத் துறை, வென்றோர் விளக்கமும் தோற் றோர்.தேய்வும் ஆகிய இவ்விரு பெருஞ்சிறப்பினையும் தனக்கு நிலைக்களனாகக் கொண்டு நிகழ்வது என் பார், விென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளையும்? எனக் காரணகாரிய இயைபு புலனாக இயைத் துரைத் தார் தொல்காப்பியனார். - ... --