பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க0 அ தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரைவளம்

இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபுகொடுத்து அதற்கேற்பப் பொருள் கூறலும் ஒன்று. (அ)

பாரதியார்

கருத்து :- இது வஞ்சித்திணையின் துறைவகையும் அவற்றின் தொகையும் கூறுகின்றது.

பொருள் :- இயங்குபடை யரவம்-போர்மேற் செல்லும் தானையின் ஆர்ப்பும்;

(முன் வெட்சித்திணைத் துறையாய்க் குறிக்கப்பட்ட நிரை கவர விரையும் படை யியங்கரவத்தின் வேறாய், போர்மேற் செல்லும் தானையின் ஆரவாரம் இதில் கூறப்பட்டது. வெட்சியி லாகோள் களவில் நிகழ்வதாகலின், ஆர்த்துமேற் செல்வதற்கேற் புடைத்தன்று; அதனாலாங்கு வேந்துவிடு முனைஞரின் கரவியக் கத்தியலரவங் குறிக்கப் படை யியங்கரவம் எனப்பட்டது. போர்க் கெழுமாதலின் படை அரவமெனவும் ஆர்த்துப் போர்க்கெழு மாதலின் படை அரவமெனவும், அது போரார்ப்பின் வேறாதவின் இயங்குபடையரவ மெனவும் விளக்கிய செவ்வி வியத்தற்குரித்து.*)

எரிபரந்தெடுத்தல்-வழியில் பகைப்புலத்தில் தம் செலவைத் தகையும் ஊர்களை நெருப்பிட் டழித்தலும்;

வயங்கல் எய்திய பெருமையானும்-மேற்செல்வோர் வினை விறல்களால் விளங்கிய சிறப்பும்;

கொடுத்த லெய்திய கொடைமையானும் தானை மறவர்க்குத் தக்காங்குப் பண்பறிந்து வரிசையின் வழங்கும் கொடைப் பெரு மையும்;

எனத் துறை விளக்கம் தருவர் ஐயனாரிதனார். அஃது ஒருவன் தாங்கிய பெரு மைப்பாற்படுமென்றுணர்க’ என அவர் கருத்தினை மறுத்துரைப்பர் நச்சினார்க் கினியர். விசையொ டும் வரும் பெருவெள்ளத்தைக் கல்லணை தாங்கினாற்போல விரனொருவன் தன்மேல்வரும் பெரும் படையினைத் தானொருவனேயாக நின்று தடுத்த பெருமையினைப் புலப்படுத்துவது ஒருவன தாங்கிய பெருமை என்னும் கறையாகும். தழிஞ்சியாகிய இது, தன்னெதிர் நிற் றலாற்றாது தோற்றோடும் பகைவரது ப ை-யின் மேல் வாட்படையோச்சாது பகைவரையும் கருணையால் தழுவிக் கொள்ளு தற்கேற்ற மிக்கதறுகண்மையினையுணர்த்துவதாகலி ன் ஒருவன் தாங்கிய பெருமையின் கண் அடங்காதென்றுணர்க.

படையொடு மேற்செல்லும் அளவில் ந்ல்லாது பகைவரது நாட்டின் எ ல்லை 4ம்புக்கு அவரது மதிலை முற்றுகையிடுதல் வஞ்சித்தினையுளடங்காது. ஆ நிஇைத்தினையாம் என்பது கருத்து. அஃது-அவ் வஞ்சித்திணை. இருவர்மேற்செல்லுந் தொழிலினராகிய வேந்தர் இருவர். பகைவர் நாட்டின் மேற் சென்று அந்நாட்டின் எல்லையளவில் தங்குதலே வஞ்சித்திணையாகும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

1. வெட்சியிற் கூறப்பட்ட படையியங்கரவம் என்ற துறைக்கும் இங்கு வஞ்சியிற் கூறப்படும் இயங்கு படையரவம் என்ற துறைக்கும் இடையேயமைந்த வேறுபாட்டினை நாவலர் பாரதியார் விளக்கிய திறம் நயமுடையதாகும்.