பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா எ கSக

(பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மை வேறு: இங்குக் குறிக்கப்படுவது போர் வீரருக்கு மன்னர் வரிசை நோக்கி நாடு முதலிய நல்கும் பரிசேயாகும்)

அடுத்துார்ந்தட்ட கொற்றத்தானும்-எதிர்ப்பாரை முன் னேறிப் பொருதழித்த வெற்றியும்.

மாராயம் பெற்ற நெடுமொழியானும்-பெற்ற பரிசிற் பெரு மிதத் தற்புகழ்ச்சியும்.

(மாராயம் என்பது வரிசையொடு பெற்ற பரிசு சுட்டும் நன் மதிப்பு. நெடுமொழி -தற்புகழ்ச்சி.)

பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்-மாற்றாரை மதி யாமல் எதிர்த்து ஊக்கிய மிக்க ஆண்மைத்திறமும்.

இப் புறப்பாட்டில், நெடுஞ்செழியன் இளம் பருவத்தில் பகை மன்னர் எழுவரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தாக்கிப்பொருது

வென்ற ஆண்மைத் திறனை இடைக்குன்றுார் கிழார் புகழும் செவ்வி பாராட்டற் பாலது.

வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்-விரைந்து பெருகிவரும் வெள்ளத்தை அசை யாமல் நின்று தடுக்கும் கல்லணை போல, எதிர்த்து மேல்வரும் பகைப்படையை அஞ்சாது ஒருவனாய்த் தனி நின்று தகைக்கும் வீறும்;

பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும்-திரளைகளாக விரும்பியாங்கு மிக்க சோற்றைத் (தானையர்க்கு) வழங்கும் தகை மையும்;

இச்செய்யுள்களுள் முன்னதில் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் செருப்புகள் மறவர்க்குப் பெருஞ் சோறுகுத்த' பரிசு கூறப்படுகின்றது.

மற்றச் சிலப்பதிகாரச் செய்யுளடிகள் செங்குட்டுவன் வஞ்சி சூடி வட வாரியர் மேற்சென்றபொழுது நிகழ்த்திய செய்திகளுள்

தன் படைத்தலைவர்க்குப் பெருஞ்சோறு வழங்கிய சிறப்புச் சுட்டுதல் காண்க.

வென்றோர் விளக்கமும்-சேரும் வழியில் நேரும் போர்களில்) கொற்றம் கொண்டோர் பொலிவும்;

தோற்றோர் தேய்வும்-அவரால் அடப்பட்டோர் மெலிவும்: