பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


{{}

மூலத்தை அடியொற்றி எளியநடையில் தெளிவுரையாக வரையப்பெற்றதாகும்,

இவ்வாறு ஒருநூலுக்கு அமைந்த எல்லாவுரைகளையும் தொகுத்து வெளியிடப் பெறுவதாகிய உரைவளப்பதிப்பு சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் ஒன்றாகிய சிவஞான சித்தி யார் சுபக்கத்திற்குக் கொன்றமாநகரம் சண்முகசுந்தரமுதலியார் அவர்களால் கலி 4991-இல் (கி.பி. 189) வெளியிடப்பெற்றது. இவ்வுரைவளப்பதிப்பில் சிவஞானசித்தியார் சுபக்கத்துக்கு மறை ஞானதேசிகர், சிவாக்கிரயோகிகள், நிரம்பவழகிய தேசிகர், ஞானப்பிரகாசர், சிவஞானமுனிவர், சுப்பிரமணிய தேசிகர் ஆகிய அறுவரும் எழுதிய உரைகள் பாடல்கள் தோறும் பகுத்து அமைக்கப் பெற்றுள்ளன. இம்முறையினைப் பின்பற்றி மகாவித்து வான் திரு. ச. தண்டபாணிதேசிகர் அவர்கள் திருக்குறளுக்குக் கிடைக்கும் எல்லாவுரைகளையுந் தொகுத்துத் தமது ஆய்வுக் குறிப்புக்களுடன் திருக்குறள் உரைவளத்தினைத் தருமையாதீனத் தின் வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள் இம்முறையினை யடி யொற்றியே நாலடியார்க்குப் பதுமனார் முதலியோர் எழுதிய உரைகளைத் தொகுத்து நாலடியார் உரைவளம் என்ற பெய் ருடன் தஞ்சைச் சரசுவதிமகால் நூல்நிலையத்தார் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். இப்பொழுது தமிழ்ப்பல் கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து கல்விப்பணிபுரியும் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் எம்.ஏ , பிஎச்.டி., அவர்களும் ஆப்பிரகாம் அருளப்பன் எம்.ஏ., அவர்களும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் நான்கியல்களுக்கு மட்டும் கிடைத்துள்ள உரைகளைத் தொகுத்து உரைக்கோவையென்ற பெயருடன் 1953-இல் வெளியிட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிடத் தகுவ தாகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்குரிய உரைவளப்பணி சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வித்துவான் திரு. ஆ. சிவலிங்கனாரவர்களால் நிகழ்த்தப்பெற்று வருவதும் இங்கே குறிப்பிடற்குரியதாகும்.

இவ்வாறு இருநூலுக்கமைந்த உரைகள் எல்லாவற்றையும் கால அடைவில் வரிசைப்படுத்தி இன்றியமையாத உரைவிளக்கங் களுடன் வெளியிடப்பெறும் உரைவளப்பதிப்பு மூலநூலின் ஆசிரியர் கருதிய பொருளையும் அதற்கமைந்த உரைகளிற் காணப்படும் விளக்கங்களையும்)உள்ளவாறு கற்றுணர விரும்பு வார்க்கும் அப்பொருள் குறித்து மேலும் ஆராய விரும்பும் ஆராய்ச்சியாளர்க்கும் பெரிதும் துணைபுரிவதாகும்.