பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ககப் தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்-குறையாத சீருடைய தம் மன்னர் வெற்றிக்குப் புகழும், மாற்றார் தோல்விக் குப் பரிவும் குறித்து, மகளிர் பாடும் உலக்கைப்பாட்டும்;

வள்ளை என்பது பெண்டிர் பாடும் உலக்கைப்பாட்டு; அதாவது தலைவனை வாழ்த்தி முருகனைப் பரசி, உலக்கைக் குற் றோடொத்துப் பெண்டிர் பாடும் பாட்டு; ஆடவர் முருகனைப் பாடும் வள்ளியின் வேறுபட்டது. இது முன் வெட்சித்திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்பட்டது.

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ-பகைவரின் அழிவுதரும் படைக்கலன்களை எதிர்த்து மார்பேற்றுப் புண் கொண்ட மறவரைத் தழுவுதலுடன் கூட்டி:

(அழிபடை வினைத்தொகை, அழிக்கும் படையென விரியும். தட்டுதல், எதிர்த்தல் அல்லது மோதலாகும்; எனவே தட்டோர் என்பது பகைவர் படைகள் மோதி மார்பு புண்பட்டவர்.)

இந்நெடுநல் வாடை ஈற்றடிகள் நெடுஞ் செழியன் பாசறையில் பொருது புண்பட்ட தன்படை மறவரை முகமலர்ச்சியுடன் பொருந்தப் பாராட்டித் தமராகத் தழுவும் பரிசு குறிக்கப்படு கின்றது. .

இனி, இதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, தளரும் தம் படையைப் பின் வாங்காது தடுத்துக்கித் திறன் வியந்து தழுவுதலுடனே கூட்டி எனப் பொருள் கொள்ளினும் அமையும்.

இப் பொருளில் இத் துறைக்குச் செய்யுள் வருமாறு ,

அவர்படை வரூஉங் காலை தும்படைக் கூழை தாங்கிய அகல்யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றானை எனஅ அரிதாற் பெருமநின் செவ்வி; பொருநர்க் குலையா நின் வலன்வா ழியவே.

-புறம் க சுகூ, காரிக் கண்ணனாரின் இப் புறப்பாட்டடிகள் தளரும் தன் படையின் கூழை தாங்கி, வரும் பகைப் படையை வலிதொலைத்த பிட்டனின் பெருமையைக் கூறுகின்றன.

இப் பொருளில் அழிபடை என்பது அழியும் படை என விரியும்; தட்டோர் என்பது தடுத்தோர் எனும் பொருளதாகும்.

2. வள் ைள என்பது, பெண் டிர்பாடும் உலக்கைப்பாட்டு எனவும் ஆடவர் முருகனைப் பாடுவது வள்ளையெனவும் இவ்வாசிரியர் கூறும் வேறுபாடு மேலும் சிந்தித்தற்கு ரியது.