பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ö岛岛P தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

போற்றி மகிழ்வோர், அவனது கொற்றத்தால் பகைவர் நாடு எய்திய அழிவினை நினைந்து இரங்குதலும் இயல்பாதவின், 'மன்னவன் புகழ்கிளந்து ஒன்னார் நாடு அழிவுக்கு இரங்கியது: கொற்றவள்ளை என்னும் துறையெனக் கொண்டார், ஐயானரித னார். "கொற்றவள்ளை தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை" என்பர் இளம்பூரணர்.

அழிபடை-அழிவினைச் செய்யும் படைக்கலம். தட்டோர்

தடுத்துப் புண்பட்டோர். தழிஞ்சி-தழுவிக்கொள்ளுதல். 'தழிச் சுதல் தழிஞ்சியாயிற்று. பொருகணை தழுச்சிய புண் தீர்மார்பின் என்புழிப்போல என இத்துறையின் பெயர்க்காரணத்தை விளக் குவர் நச்சினார்க்கினியர். இனி அழிபடை என்றது போரில் எதிர்த்து நிற்றலாற்றாது புறங்கொடுத்தோடும் படை எனவும், அங்ங்ணம் அழிந்தோடும் படைவீரர்மேற் படைக்கலங்களைச் செலுத்தாது அருளினால் தழுவிக்கொள்ளுதலே தழிஞ்சியாம் எனவும் கொண்டு,

அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஒச்சாக்

கழிதறுகண்மை காதலித் துரைத்தன்று' எனக் கருத்துரை பகர்வர் ஐயனாரிதனார் மாற்றார்விடு படைக் கலன் முதலியவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளம் அழிந்தோர் ஆகிய வீரர்களைப் பேணித் தழுவிக் கோடலே தழிஞ்சி என்னும் துறையாம் என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய உரை யாசிரியர்கள் கருத்தாகும்.

'உச வரும் மடவரும் அறிவு தெரிந்தெண்ணி

அறிந்தனை யருளா யாயின்

யாசிவண் நெடுந்தகை வாழுமோரே' (பதிற்.71} என்பதும் இதன்கண் (தழிஞ்சியென்னும் இத்துறையில்) அடங்கும் எனவும் இது முதுமொழிவஞ்சி எனவும் இளம்பூரணர் குறிப் பிடுவர். 'புண்பட்டோரை முன்னர்ச் செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவும் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழி வஞ்சி என்பர்’ எனவரும் நச்சி னார்க்கினியர் உரை மேற்குறித்த இளம்பூரணர் உரைக்கு விளக்க மாகும். இத்தழிஞ்சியை முதுமொழி வஞ்சி எனக் கூறுவோர் இன்னாரென்பது விளங்கவில்லை.

'தொன்மர பின் வாட்குடியின்

முன்னோனது நிலைகிளந்தன்று'