பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-ன் தகடு

எனப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் முதுமொழிவஞ்சி என்னுந்துறையும் இங்கு உரையாசிரியர் சுட்டிய முதுமொழிவஞ்சி யும் கருத்துவகையால் வெவ்வேறு துறையென எண்ண வேண்டி யுள்ளது.

தொல்காப்பியனார் வஞ்சித்திணைக்குரிய வாகக் கூறிய துறை களுடன் அவர் காலத்திற்குப் பின் புதிய துறைகள் சிலவும் வஞ்சித் திணையில் இடம் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. இச்செய்தி,

'குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடுமாாயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும் பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று நிலையும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்'

(சிலப்.காட்சிக் 14:1-145)

எனவரும் இளங்கோவடிகள் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம். இதன்கண் உள்ள குடைநிலைவஞ்சி என்பது தொல் காப்பியர் கூறாத புதுத்துறையாகும். ஆசிரியர் தொல்காப்பி யனார் வஞ்சித்திணையை யடுத்துக் கூறப்படும் உழிஞைத்தினைத் துறைகளை விரித்துரைக்குமிடத்து குடையும் வாளும் நாள்கோள் அன்றி என எச்சப்படவைத்துத் தொடங்குதலின் உழிஞைத் திணையின் தொடக்கத்திற் கூறப்படும் குடைநாட்கோள், வாள் நாட்கோள் என்னும் இவ்விரண்டு துறைகளும் இதற்கு முன் கூறப் பட்ட வஞ்சித்தினைக்குரியனவாகவுங் கொள்ளற்பாலன என்னுங் கருத்து பெறப்படுதலால், இவ்விரு துறைகளையும் வஞ்சித் திணைக்கு உரியனவாகக் கொண்டார் இளங்கோவடிகள். செங் குட்டுவன் வஞ்சி சூடி வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென்ற புறத்திணைச் செய்தியினை

'மீள வென்றி வேந்தன்கேட்டு வாளுங்குடையும் வடதிசைப் பெயர்க்கென மறமிகுவாளும் மாலைவெண்குடையும் புற நிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்தி பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி வாய்வான் தெடுத்தகை மணிமுடிக் கணிந்து'

(சிலப். கால்கோள்-32-51)