பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ & శ్రీy தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

எனவரும் பகுதியில் விரித்துக்கூறியுள்ளார். இங்ஙனம் குடை நாட்கோள், வாணாட்கோள் என்னும் துறைகள் வஞ்சித்திணைக் குரியனவாகச் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றமை போன்று பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய புறத்திணை யிலக்கண நூல்களிலும் இடம் பெற்றன எனத் தெரிகிறது.

வஞ்சியும் காஞ்சியும்

பிறநாட்டுவேந்தன் தனது நாட்டின்மேற் படையெடுத்து வந்தக்கால் எதிர்சென்று அவனது சேனையைத் தடுத்து நிறுத்து தல் நாடாள் வேந்தனது கடமையாகும். இங்ங்னம் தன்னாட்டின் மேற் படையெடுத்துவரும் வஞ்சிவேந்தனது படையினை எதிர் சென்று தடுத்து நிறுத்துதலாகிய இப்போர்ச் செயல், பல்லாற் றானும் நில்லாவுலகியலைப் புல்லிநிற்றலாகிய காஞ்சித்தினையுள் அடங்குவதாகுதலின் ஆசிரியர் தொல்காப்பியனார் எதிரூன்ற லாகிய இதனைத் தனித்திணையாக வகுத்துரைத்திலர், போர் மறவர் அனைவரும் உலக:நிலையாமையை நன்குணர்ந்து நில்லாத வற்றால் நிலைத்த புகழை நாட்டும் குறிக்கோளுடையராதலின் அவரது வாழ்வியலின் நோக்கம் காஞ்சித்திணையேயாதலின் நிலையாமைக் குறிப்பினை எப்பொழுதும் உள்ளத்திற் கொண் டிருந்து அமைதிபெற்ற அத்தகைய படைமறவரைக் காஞ்சி சான்ற வயவர் (பதிற்று-65-90) எனவும், அவர்தம் போர்ச் செயலைக் 'காஞ்சி சான்ற செரு (பதிற்று 84) எனவும் புலவர் பெருமக்கள் போற்றிப் புகழ்வாராயினர். படைமறவ ருள்ளத்தே நிலைபெறு தற்குரிய இத்தகைய நிலையாமைக் குறிப்பு தமதுநாட்டின்மேற் பகைவர் படையெடுத்து வந்துள்ளார் எனக் கேட்ட அளவில் அந் நாட்டுப் படைவீரர் உள்ளத்திலே மேன்மேலும் மிக்குத்தோன்ற மறங் கிளர்ந்தெழுந்து பகைவர் சேனையை எதிர்சென்று தடுத்து நிறுத்துதலாகிய போர்த்தொழிலில் அன்னோர் ஊன்றி நிற்றல் இயல்பாதலின் எதிரூன்றல் காஞ்சி' என்னும் சிறப்புடைய திணைப் பகுப்பும் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் உருவாகி புறத் திணையிலக்கணத்தில் இடம்பெறுவ தாயிற்று.

வஞ்சிவேந்தனது சேனையைத் தடுத்து எதிரூன்றல் காஞ்சித் திணையாம் என்னும் இப்புறத்தினைப் பாகுபாடு இளங்கோ வடிகள் காலத்திற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே தோன்றி நாட்டில் நிலைபெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இவ்வுண்மை,