பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கிய தொன்மை வாய்ந்தது இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் என்பதனை அறிஞர் பலரும் நன்குனர்வர். இந்நூல், தான் தோன்றிய நாள்முதல் தமிழ் மொழியினையும் தமிழர் நாகரிகத்தினையும் பேணி வளர்க்கும் புதுமைப்பொலிவுடன் திகழ்ந்துவரும் பெருமையுடையதாகும். இந்நூலைக் காலந்தோறும் ஆழ்ந்து பயின்ற புலமைச் செல்வர்கள் இந்நூலுக்கு வரைந்துள்ள உரைகள் யாவும் கடைச்சங்க கால முதல் இன்றளவும் பல்வேறு பரப்புடையனவாகக் கிளைத்து வளர்ந்த தமிழிலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் வரம்பாகத் திகழும் முழுமுதல் இலக்கணம் இத்தொல்காப்பியமேயென்னும் உண்மை யினை வற்புறுத்தும் நிலையில் அமைந்துள்ளன. இத்தகைய உரைவளங்களால் தமிழ் முதனூலாகிய தொல்காப்பியத்திற்குப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் கண்டுணர்த் திய பொருள் நுட்பங்களைத் தொகுத்துக் கானும் வாய்ப்பு உண் டாகின்றது. பண்டைத் தமிழ்த் தொன் னுரலுக்கு மெய்யுரை காணுந் திறத்தில் தமிழறிஞர்கள் காலந்தோறும் பெற்றுள்ள கருத்து வளர்ச்சியினையும் அவ்வவ்வுரையாசிரியர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலைகளையும் உள்ளவாறு உணரமுடிகின்றது. பல்வேறு உரைகளிற் காணப்படும் மறுப்பும் தடைவிடைகளுங் கொண்டு மூலநூலாசிரியர் சொல்லக்கருதிய பொருள் இதுவாகத் தான் இருத்தல் வேண்டும் எனத் துணிதற்குரிய நூற்சான்றுகளும் கிடைக்கின்றன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் அகத் திணை புறத்திணை பற்றிய தமிழ்மக்களின் வாழ்வியல் ஒழுகலாறு களும் அவற்றைப் பாடுதற்குரிய புலனெறி வழக்கமாகிய செய்யு ளமைப்பும் அவை குறித்த சொற்பொருள் மரபுகளும் நன்கு புலனாகின்றன.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து, பல்கலைக்கழகம் அறிவியல், பொறியியல், தொழிலியல் முதலிய பலதுறைகளிலும் இந்தியப் பல்கலைக் கழகங்களுள் முதன்மைபெற்றுவிளங்குதல் வேண்டும் என்னும் பெரு விருப்புடன் அயராது உழைத்தும் தமிழாய்வுக்கெனத் தமிழியற்புலம் என்னும் தனித்துறையினை அமைத்தும் தமிழ்நலம் பேணிய செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் வ. சுப. மாணிக்கம் எம்.ஏ.பி.எச்.டி.டி.லிட் , அவர்களாவர். தமிழியற்புலத்தின் ஆய்வாளருள் ஒருவராக என்னை அழைத்து இணைப்பாளராக நியமித்துப் பணிகொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தராகிய அவர்கட்கும் பல்கலைக்கழக